July 30, 2021

என்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (Main) தேர்வுகள் ஒத்திவைப்பு!!

ந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த என்ஜினியரிங் படிப்புக்கான ஜேஇஇ (Main) தேர்வுகளை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ (Main) நுழைவுத் தேர்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், ஏற்கனவே பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட தேர்வு, ஏப்ரல் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று நோயின் தற்போதைய நிலைமையைப் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த ஜேஇஇ (JEE –Main) தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார்.

மேலும் இதற்கிடையில் மாணவர்கள் தங்களைத் தேர்வுக்கு சிறப்பாகத் தயார் படுத்த இந்த நேரத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், நடைபெறும் தேதிகள் குறித்து தேர்வு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.