ஜெ. பற்றி வதந்தி கிளப்புவோர் கைது குறித்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

ஜெ. பற்றி வதந்தி கிளப்புவோர் கைது குறித்த மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அவருடைய உடல் நிலை பற்றி முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் வதந்தி பரப்பி வருவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் 40–க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தவிர, இதுபோல் வதந்தி கிளப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

DEFERMARTION OCT 24

இதனிடையே, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் மணி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், டிராபிக் ராமசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

ஆனால், இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். விசாரணையின் போது தொடக்க கட்டத்தில், நீதிபதி மிஸ்ரா மற்றும் அமிதவ் ராய் அடங்கிய அமர்வு, “இதற்கெல்லாமா கைது செய்கின்றனர்? ஏன் இதனை வேறு விதங்களில் கையாள முடியாதா?” என்று கேட்டனர். ஆனாலும் இந்த விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அவதூறு கிரிமினல் குற்றத்தின் அடிப்படையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

மேலும், “தற்போதையை மனு அவதூறு வழக்குடன் தொடர்புடையது அல்ல. மாநில அரசின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று மிஸ்ரா தெரிவித்தார்.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தில் தவறான தகவல் அளித்ததன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது சில நபர்கள் சில விஷயங்களைக் கூறியதாகக் கைது செய்யப்பட்டுள்ளதை மனுதாரர் எதிர்க்கிறார். இதனை அரசு தரப்பு தவறு என்று கூறுகிறது என்று நீதிபதி மிஸ்ரா கூற அதற்கு வழக்கறிஞர் மணி, “அரசைப் பொறுத்தவரை ஆன்லைன் மூலம் வதந்திகளைப் பரப்புகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது, இது ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு, குடிமகனின் சொந்த சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்றார்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “கைது செய்யப்பட்டவர்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர், இது சீரியசான விஷயம்” என்றார். இதன் பின்னர் மனுதாரர் எதிர்காலத்தில் இதற்கு சட்ட ரீதியான நடைமுறையை அணுகலாம் என்று அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!