அம்மா ஜெயலலிதா உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம்

அம்மா ஜெயலலிதா உடல்  எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம்

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரீனா பீச்சில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதையுட நடந்த இறுதிச்சடங்கில் தமிழக அளூநர் வித்யாசாகர ராவ் இறுதி மரியாதை செலுத்தினார். மத்திய அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினர் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இறுதி அஞ்சலி செலுத்தினார். தோழி சசிகலாவும் ஜெயலலிதா சகோதரர் மகன்  தீபக் இறுதிச்சடங்கு செய்தனர்.

jaya samathy dec 6

முன்னதாக நேற்று இரவு 11.30 மணியளவில் காலமான ஜெயலலிதா உடல் அப்போலோவிலிருந்து போயஸ் கார்ட்டனிலுள்ள வேதா இல்லம் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா உடலுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், கவர்னர் விதசயாசாகர் ராவ், தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீஸ், நடிகர் நடிகைகள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஜெயலலிதா உடல் முப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க பேழையில் வைக்கப்பட்ட ஜெ., உடல், மலரால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அங்கிருந்து, ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு மாலை சுமார் 4.30 மணிக்கு எடுத்து செல்லப்பட்டது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சசிகலா, அவரது உறவினர்கள் என லட்சக்கணக்கான மக்கள் ஜெயலலிதா உடலை ஏற்றி வந்த வாகனத்துடன் உடன் வந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர், மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் 5.30 மணியளவில் ஜெயலலிதா உடல் வந்து எம்.ஜி.ஆர்., நினைவிடம் வந்து சேர்ந்தது.

இறுதிச்சடங்கில், கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அமைச்சர்கள், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கு முப்படை வீரர்கள் ஜெயலலிதா உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சந்தன பேழைக்கு மாற்றப்பட்டது. இறுதியாக அவரது உடலுக்கு கவர்னர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைச்செயலாளர் ராமமோகன்ராவ், முன்னாள் கவர்னர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திருநாவுக்கரசர், நடராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஜெயலலிதா உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு சசிகலாவிடம் கொடுக்கப்பட்டது. வைணவ சம்பிரதாயப்படி, ஸ்ரீரங்க பட்டர் வழிகாட்டியவாறு சசிகலாவுடன் தீபக் (ஜெயலலிதா அண்ணன் மகன்) இறுதிச்சடங்குகள் செய்தார். தொடர்ந்து, ப்பாக்கி குண்டுகள் முழங்கி ஜெயலலிதா உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அளிக்கப்பட்டது. பின்னர் 6 மணியளவில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தன பேழையில், புரட்சி தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா என ஆங்கிலம், தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மத்திய அரசின் அனுமதி பெற்று விரைவில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!