Exclusive

ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் ‘ஜாஸ்பர்’ படம்..!

மிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குனர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம்.

முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டை காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும், பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்து, பாடகர்கள் பிரதீப் குமார் மற்றும் சைந்தவியின் இனிமையான குரலில் பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது இந்த ஜாஸ்பர் திரைப்படம்.

இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம் பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

90 காலகட்டங்களில் ஒரு ஹிட்மேன் ஆக வலம் வரும் கதாநாயகன், தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டுவிட்டு ஓய்வு காலத்தில் அமைதியான ஒரு தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வரும் கதாநாயகனுக்கு திரும்பவும் தன் வாழ்வில் ஒரு இழப்பை சந்திக்க நேரிடுகிறது. அந்த இழப்பை தவிர்ப்பதற்கு மறுபடியும் ஹிட்மேன் ஆக உருவெடுக்கிறார், இந்த படத்தின் கதாநாயகன் ஜாஸ்பர்.

இணையத்தில் வெளியாகி உள்ள ஜாஸ்பர் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி ஜாஸ்பர் திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

aanthai

Recent Posts

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…!

பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…

5 hours ago

உணவு விநியோகம் பெற உதவும் வாட்ஸ் ஆப் எண் 8750001323 – இந்திய ரயில்வே அறிமுகம்!

நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…

7 hours ago

சர்ச்சைகளுக்கிடையே விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவியேற்பு..!

பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…

11 hours ago

இணையில்லாத இறையன்பு! காகிதப் படகில் சாகசப் பயணம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…

17 hours ago

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…

1 day ago

சிம்ஹா நடித்த ‘வசந்த முல்லை’ படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…

1 day ago

This website uses cookies.