July 31, 2021

ஜப்பான் மக்களுக்கு ‘அதில்’ இண்ட்ரஸ்ட் குறைவு : அதனால் ஜனத்தொகை வீழ்ச்சி!

ஜப்பானுக்கு எப்படி ஒரு சர்வதேச தொழில் முகம் இருக்கிறதோ அதே போல், அங்கு பார்ன் தொழில் களுக்கு என்று ஒரு சர்வதேச முகம் இருக்கிறது. அதே ஜப்பானில் இன்று ஜப்பானிய இளைஞர் களுக்கு மத்தியில் உடல் உறவு கொள்வது ஏதோ ஒரு அந்நியமான செயலாக, வெட்கப் படக் கூடிய ஒரு செயலாக பார்க்கப்படுகிறது என்று முன்னரே செய்திகள் வெளியான நிலையில் ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பது குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை அந்நாட்டினர் கவலயுடன் ஆராய்ந்து வருகின்றனர்.

அதாவது ஜப்பானில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து 10 லட்சத்துக்கு குறைவாகவே குழந்தைகள் பிறக்கின்றன. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு 9,18,397 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதே ஆகும்.

இது குறித்து அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி குடும்பத்தை நடத்துவதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பொறுப்பு ஏற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி ஆண்களை விட அதிக ஊதியம் பெறும் நிலையில் உள்ளனர்.

இதனால் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் பல ஆண்களுக்கு ஊதியக் குறைவால் திருமணம் நடப்பதில்லை. திருமணமாகாத இளைஞர்களில் பாதிக்கும் மேலோருக்கு காதலிக்கவும் பெண்கள் கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார ஏற்றத் தாழ்வு என கூறப்படுகிறது.

இதே ஜப்பானில் திருமணம் செய்து கொண்டாலும் 18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் ஆண்-பெண் 43% தங்களின் வாழ்நாளில் ஒரு முறை கூட செக்ஸ் வைத்துக் கொண்டது கிடையாது என்று முன்னரேஅதிர்ச்சியூட்டும் தகவல்களும் வெளியாகின. அதே சமயம் ஏஐ ரோபோட்களை திருமணம் செய்து வாழும் கலாச்சாரம் ஜப்பானில் தலை தூங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. போகிற போக்கைப் பார்த்தால் இக்குறியிட்ட இடத்தில்தான் ஜப்பானியர்கள் என்போர் வாழ்ந்தார்கள் என்று பாடப் புத்தக்கத்தில் படிக்க வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை