ஜப்பான் விண்ணில் செலுத்திய உளவு செயற்கைக்கோள்!
ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7′ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களை பிடிக்கும் திறன் கொண்டதாகும்.
இந்த ‘ஐ.ஜி.எஸ். 7′ செயற்கைக்கோள் ‘46 எச்2ஏ’ ராக்கெட் மூலம் ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், ‘ஐஜிஎஸ்-5′ செயற்கைக்கோளுக்கு மாற்றாக செலுத்தப்பட்டிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் தாமதமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘Let’s Get Married’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணி எழுதி டைரக்ட் பண்றார்.
இந்தப்படத்தின் நாயகனாக ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அண்மையில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் நடித்த நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுடன் நடிகர் யோகி பாபு, நடிகை நதியா உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.