ஜாங்கோ- விமர்சனம்!

ஜாங்கோ- விமர்சனம்!

ந்திய சினிமா உலகில் மொதல் ‘டைம் லூப்’ திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு இன்று திரைக்கு வந்திருக்கும் சினிமா ஜாங்கோ. உண்மையை உரத்தக் குரலில் சொல்வ்தானால் இப்படி புது தமிழ் சொல்லாடலைக் கொடுத்து ரசிகனை ஏமாற்ற வந்திருக்கும் படமே இந்த ஜாங்கோ. கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் உலகின் முதல் சயின்ஸ் பிக்சன் படமாக அறியப்படுவது A trip to the moon என்ற சினிமா. முதல் ஏலியன் படம், முதல் adopted from text படம் என மேலும் பல சிறப்புகள் அந்த சினிமாவிற்கு உண்டு. 1865ஆம் ஆண்டு பிரஞ்ச் எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னே from the earth to the moon என்ற புத்தகத்தை எழுதினார். இதனை அடிப்படையாகக் கொண்டு 1902ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் A trip to the moon. இத்திரைப்படத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகசினிமா பிதாமகன் ஜார்ஜ் மெல்லிஸ் தயாரித்து இயக்கினார். அதன் தொடர்ச்சியாகதான் அறிவியல் புனைவுப் படங்கள் உலகின் எட்டுத் திசைகளிலும் வீரியமாக முளைக்கத் துவங்கின.அப்படியான சூழலை மனதில் கொண்டு எம்.ஜி.ஆர் கூட அவ்வப்போது சில மாற்று சினிமா முயற்சிகளுக்கும் தோள் கொடுத்திருக்கிறார். அப்படியானக் காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் சினிமா எடுத்த படம் கலைஅரசி. 1963ல் வெளியான இந்த சினிமாவே தமிழில் வெளியான முதல் விண்வெளி திரைப்படமாக அறியப்படுகிறது. இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம் இது என்ற உரையாடலும் இன்று வரை உண்டு. அந்த கலையரசி அத் திரைப்படத்தில் காட்டப்படும் பறக்கும் தட்டின் வடிவமைப்பும் அதன் கலை வேலைப்பாடும் இப்போது பார்க்க சுமாராக தோன்றினாலும், முழுக்க முழுக்க ஒரு தியரியை வைத்துக் கொண்டு ஒரு இயந்திரத்தை, சாதனத்தை உருவாக்கி புதுமையான திரைக்கதையை 58 வருசங்களுக்கு முன்னரே தமிழ் ரசிகன் பார்வைக்குக் கொண்டு வந்த நிலையில் மனநிலை பிறழ்ந்த ஒரு கேரக்டரை உருவாக்கி இந்திய சினிமாவில் முதல் என்று சொல்வதே வெட்கக்கேடு.. அதிலும் தாங்கள் எடுத்துக் கொண்ட மீண்டும் மீண்டும் ஒரே நாளில் நடக்கும் வெவ்வேறு சம்பவங்கள் அதனை மாற்ற முயலும் நாயகனின் முயற்சிகள் என சுவாரஸ்யமான ஐடியாவை தெளிவாக சொல்ல நினைத்து சொதப்பி நம் நேரத்தை விரயம் செய்திருக்கிறார் இயக்குநர்.

வழக்கமான சயின்ஸ் பிக்‌ஷன் படங்களுக்கேயான பிரச்னையினையைத்தான் இந்த சினிமாவும் சந்தித்திருக்கிறது. அதாவது சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் அதீத ஆர்வமும் , ஓரளவு வெட்டியான நேரமும் வேண்டும். அதே சமயம் இந்த அது, இது எது-ன்னு சொல்ல வைக்கும் டைம்லூப் சமாச்சாரத்தை புத்திசாலித்தனமாக கையாண்டால்தான் ரசிகரின் ஆர்வத்தை கொஞ்சமாவது திருப்திப்படுத்த முடியும். ஆனால் ஜாங்கோ அதனை முழுமையாக தவற விட்டு நோகடித்து விட்டது

சதீஸ்குமார், மிருநாளினி, கருணாகரன், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் சினிமா என்று சொல்லிக் கொள்ளும் இப்படத்தை இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார். கதை என்னவென்று கேட்டால் சென்னையில் பேமஸ் டாக்டரான நாயகனும் (படத்துக்கு இன்வெஸ்ட் செய்தவராம்) டிவி ஆங்கருமான மிருனாளினியும் மேரேஜ் செய்து கொள்கிறார்கள். அப்புறம் வழக்கம்போல் இருவருக்கும் இடையிலான சின்ன கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். அச்சூழலில் பூமியை நெருங்கும் எரிகல்லின் கதிர்வீச்சு தாக்கப்பட்டதால் நாயகன் சதீஸ் தன்னுடைய ஒரே நாளுக்குள் சிக்கிக் கொள்கிறார். அந்த ஒரு நாள் மீண்டும் மீண்டும் டைம் லூப் ஆகிறது. இந்த ஐடியாவினைதான் சுவாரஸ்யமாக தர முயற்சித்து தோற்றிருக்கிறது படக்குழு.

படத்தில் மீண்டும் மீண்டும் திரும்பும் ஒரு நாளின் காட்சிகள் சம்பவங்கள் இவற்றில் கொஞ்சமும் சுவாரஸ்யங்கள் இல்லை நாயகன் என்பவர் நடிப்பு என்பதையே கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இவரை முன்னிலைப்படுத்தியே முழுப் படத்தை ஓட்டுகிறார்கள்.. நாயகி மிருநாளினி வருகிறார் போகிறார்.

இன்னும் நிறைய சொல்லலாம் என்றாலும் இப்படத்தின் புரொடியூசரான சிவி குமார் முன்னொரு முறை ஒரு நாளிதழுக்குக் கொடுத்த பேட்டியை இச்சூழலில் நினைவுக் கொள்ளலாம் “ பல தரப்பு மக்களும் இப்போது ஓடிடியில்தான் சினிமா மற்றும் காணொளியை பார்க்கிறார்கள் என நினைக்கிறீர்களா? என்று கேட்டால் கிராமப்புறங்களிலேயே அப்படி அதிகமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ ஒளிபரப்பாகும் முன்பு காலையிலேயே ஹாட்ஸ்டாரில் பார்த்துவிடும் பழக்கம் வந்துவிட்டது. மக்களே சிறுபடங்களை திரையரங்குகளில் பார்ப்பதற்குத் தயாராக இல்லை. ‘இவையெல்லாம் சில தினங்களில் ஓடிடியில் வரும் பார்த்துக்கொள்வோம்’ என்கிற மன நிலைக்கு வந்து விட்டார்கள். செல்போன் சேவை வழங்கிவரும் பல நிறுவனங்கள், ஓடிடி தளங்களை இலவச இண்டர்நெட் வசதியோடு கொடுக்கின்றன. இதையெல்லாம் தாண்டி திரையரங்குகளுக்கு மக்களை வரவழைப்பது தான் சினிமாவுக்கான இன்றைய பெரும் சவால்” என்று சொன்னதை அவரே மறந்து இந்த படத்தை எல்லாம் தியேட்டரில் ரிலீஸ் செய்துதான் சிவி குமார் செய்த மிகப் பெரியத் தவறு!

மார்க் 2 / 5

error: Content is protected !!