October 18, 2021

நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947

ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்க என்று அல்ப்பறை செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல் தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டுவந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்….

kasmire oct 27

அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணையவேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்…தனித் திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை எச்சரிச்சார்…அப்போது கபாய்லி மலைவாழ் பகுதியினரின் போரெடுப்பு துவங்கியது…

காஷ்மீரை காக்க ராஜா ஹரிசிங் ஜவஹர்லால் நேருவை வேண்டிக்கொண்டார்…

அப்போது இந்திய படை காஷ்மீர் செல்லும்போது உருவான ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு
ஒரு பகுதியாக இணைந்தது… 1947-ம் ஆண்டு இதே நாள் அமர் மாளிகையில், அன்றைய ஆளுனர் மவுன்ட்பேட்டன், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள, மகாராஜா ஹரி சிங் காலத்தில் எழுத்துப் பூர்வமாக இருவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். அப்போது நேரு பிரதமராக இருந்தார்.

இந்த இணக்கத்திற்கான தினத்தினை (accession day) ஜம்மு காஷ்மீர் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார் களாம். இதில் இருந்தே அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருப்பதை எவ்வளவு விரும்புகின்றனர் என்று தெரிகின்றது.தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும், கடைகளிலும் இந்தியக் கொடியை ஏற்றி மகிழ்வர். வருடம் தவறாமல் இந்த தினத்தை கொண்டாடுவதால் இந்தியாவுடன் பிரிக்கமுடியாத உறவை வளர்த்து வருகின்றது ஜம்மு காஷ்மீர்.