உலக அழகியானார் 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் – டோனி ஆன் சிங்!

நடப்பு 2019 ஆம் ஆண்டிற்கான மிஸ் வேர்ல்ட் பட்டத்தை (உலக அழகி) ஜமைக்காவின் டோனி-ஆன் சிங் வென்றார், இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும், பிரான்சின் ஓபிலி மெசினோ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.

69-வது உலக அழகிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு முதற்கட்டமாக 40 பேர் தேந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு 10 போட்டியாளர்கள் இறுதிசுற்றுக்கு தேர்வாகினர்.

மிகுந்த எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜமைக்கா நாட்டின் 23 வயது பெண் டோனி-ஆன் சிங் உலக அழகி பட்டத்தை வென்றார்.பிரான்ஸ் மற்றும் இந்தியா வின் அழகிய போட்டியாளர்களை அவர் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு கடந்த ஆண்டின் உலக அழகி பட்டம் வென்ற மெக்ஸிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் மகுடம் சூட்டினார்.

2வது இடத்திற்கு ஓஃபெலி மெசினோ மற்றும் 3வது இடத்தை இந்திய அழகி பிடித்துள்ளார். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் என்ற 21 வயது பெண் இந்தியா சார்பாக ‘உலக அழகி போட்டியில் கலந்துகொண்டார்.

23 வயதாகும் டோனி-ஆன் சிங், அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் பெண் கள் படிப்பு மற்றும் உளவியல் மாணவியாம், மேலும் டோனி-ஆன் சிங் மருத்துவ மருத்துவராக ஆசைப்படுகிறாராம். முன்னதாக பல்கலைக்கழகத்தில் கரீபியன் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி இருக்கிறார் என்று தகவல்.