Exclusive

ஜெயில் – விமர்சனம்

சென்னையிலிருந்து துரத்தப்பட்டு நகரின் ஓரத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் குடியிருப்பில் வாழும் இளைஞர்கள் கஞ்சா விற்று, சிறு சிறு குற்றங்கள் செய்து பிழைத்து வருகிறார்கள். கஞ்சா விற்பதில் இரு கூட்டத்திற்கு இடையில் ஆரம்பிக்கும் பிரச்சனை அந்த இளைஞர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை.

இயக்குநர் வசந்தபாலன் தமிழின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அடையாளம் காணப்படுபவர். அவரின் படங்கள் யாவும், சமூகத்தில் உரிமை மறுக்கப்படும் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை பதிவாக இருக்கும். அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு செய்துள்ள திரைப்படம்தான் இது. சென்னையின் பூர்வகுடிகள் தன் சொந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டு, சென்னையை தாண்டி 30 கிமி தொலைவில், ஒரு ஜெயில் போன்ற குடியிருப்பில் இடத்தில், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடைக்கப்பட்ட கதை என சொல்லப்பட்டது. இந்த அறிமுகங்களுடன், ஆரம்பிக்கும் இதை சரியாக செய்திருக்கிறதா என்றால் அது கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

படம் ஆரம்பிக்கும் போதே ஒரு இளம்பெண்ணிடம் நாயகன் 50000 ரூபாய் போனை திருடுகிறான், அங்கேயே நாயகனின் நல்ல பிம்பம் உடைந்து விடுகிறது. அதன் பிறகு கதை முழுதும் அந்த மக்கள் படும் கஷ்டம் எதை திரையில் காட்டினாலும் நமக்கு பரிதாபம் வருவதற்கு பதில் எரிச்சல் தான் அதிகம் வருகிறது.

படத்தின் கதையின் மையம் துரைப்பாக்கம் காவேரி நகர் மக்கள் படும் அவலத்தை காண்பிப்பதற்கு பதில் அங்கு அவர்கள் செய்யும் குற்றங்களை தான் காண்பிக்கிறது. நாயகன் ஜீவி திருடுகிறார், அவர் நண்பர் கஞ்சா விற்கிறார் அவர்களுக்கு இன்னொரு கூட்டத்திற்கும் சண்டை நடக்கிறது இந்தக் கதையில் எளிய மக்களின் வலி எங்கு பதிவாகியுள்ளது என்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

நாயகன் ஜீவி தனக்கு தந்திருக்கும் பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். அழுக்கு இளைஞனாக, திருடனாக, நண்பனுக்காக உருகி, என முழுக்க வேறு முகம் காட்டியிருக்கிறார். நாயகி அபர்நிதி புதுமுகமாக தெரியவில்லை, தேர்ச்சி பெற்ற நாயகி போல் நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் இளைஞர்களும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். ராதிகா வெகு நாட்கள் கழித்து கவர்கிறார்.

ஜீவியின் இசை பாடல்களில் அதிகம் கவரவில்லை ஆனால் பின்னணி இசையில், அழுத்தமாக தன் பங்கை தந்திருக்கிறார். ஒளிப்பதிவும் சம்பந்தப்பட்ட நகரை கண் முன் கொண்டு வந்திருக்கிறது.

ஆனால் படத்தில் திரைக்கதையில் மொத்தமாக பிரச்சனை இருக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை காட்சிகள் துண்டு துண்டாக நகர்கிறது. கதையோடு நாம் ஒன்றவே முடியவில்லை. பல இடங்களில் இது வசந்த பாலன் படம் தானா என்ற சந்தேகத்தை தருகிறது படம். க்ளைமாக்ஸ் எல்லாம் நம்பமுடியாத பூ சுற்றல்.

போலீஸ் தன் கதையை தானே சொல்வது இயக்குநர் கதையை வாய்ஸ் ஓவரில் விவரிப்பது என லாஜிக் சொதப்பல்கள் படத்தின் சுவாரஸ்யத்தை மொத்தமாக கெடுக்கிறது.

மொத்தத்தில் இந்த ஜெயில் டம்மி லாக் அப்-ங்கோ

மார்க் 2.5 / 5

aanthai

Recent Posts

‘விருமன்’ வசூல் சாதனையை நிகழ்த்தும்!-சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் நம்பிக்கை!

கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான…

46 mins ago

இழிவு படுத்திய ஃபோர்டும் இனிமை செய்த டாட்டாவும்!

இந்திய நிறுவனமான டாடா சொந்த காரை 1998 ல் உற்பத்தி செய்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதன் விளைவாக அதை…

1 hour ago

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது மர்ம நபர் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தார்?.

சர்வதேசப் புகழ் எழுத்தாளர், நாவலாசிரியர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சல்மான் ருஷ்டி. இவர் எழுதிய," சாத்தானின் வேதங்கள்' என்ற…

1 hour ago

சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை !

வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் வாராந்திர போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஜனநாயக…

1 hour ago

தியேட்டர் நெருக்கடி காரணமாகத்தான் ஜீவி-2 ஓடிடி தளத்தில் வெளியாகிறது ; சுரேஷ் காமாட்சி பளிச் பேச்சு!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக…

4 hours ago

அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி காலமானார்!

தமிழர்கள் பலரும் தினந்தோறும் `செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி…

4 hours ago

This website uses cookies.