டுபாக்கூர் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ஜெயில்?

டுபாக்கூர் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ஜெயில்?

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (the consumer protect act, 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்து. இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது. இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு மசோதா மீது பாராளுமன்ற நிலைக்குழு தனது சிபாரிசுகளை அளித்துள்ளது. அதை ஏற்று, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. அந்த மசோதாவில், ஏமாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ad aug 30

அதன்படி, ஏமாற்று விளம்பரங்களில் நடிப்பதன் மூலம், முதல்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது தடவை தவறு செய்தால், ரூ.5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கலப்படம் செய்பவர்களுக்கும் இதே ஜெயில் தண்டனை, அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும்.

இந்த வரைவு மசோதா பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.

Related Posts

error: Content is protected !!