March 27, 2023

ஜாக்கிசான் மகள் லெஸ்பியன் ஆகி விட்டார்! – அதிர்ச்சி தகவல்

இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது, இயல்பானது. மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானது நினைவிருக்கும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கோடானகோடி ரசிகர்களை கொண்டிருக்கும் ஆக்‌ஷன் ஹீரோ ஜாக்கி சான். இவரது மகள் எட்டா. சமீபத்தில் இவர் தனது இணைய தள பக்கத்தில் கேர்ள்பிரண்ட் ஆன்டி ஆட்டம்னுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார். அதில், நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம் என தெரிவித்திருந்தார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபற்றி எட்டா கூறியதாவது:

எனக்கு ஆதரவாகவும் என் மீது அன்பு பொழிபவராகவும் இருக்கிறார் ஆன்டி ஆட்டம்ன். எங்கள் உறவு பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை. எங்கள் உறவு பற்றி பலரும் பாசிடிவான கருத்து சொல்லும் அதே நேரம் பலர் கேலி பேசவும் செய்கிறார்கள். ஆனால் நான் எதிர்மறை சூழலிலேதான் வளர்ந்தேன். நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன். எனது அனுபவத்தை வெளிப்படையாக சொல்ல விரும்பினேன். அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறேன் என்று கூறினார்.