September 18, 2021

உலக வங்கியின் தலைவராகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கோ?

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து,அந்த பதவிக்கு போட்டியிடுவோர் பட்டியலில் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப் மகள் மற்றும் அவரின் ஆலோசகர் இவாங்கா பெயரும்  இடம்பெற்றுள்ளது என்றும் அநேகமாக அவரே பொறுபேற்கக் கூடும் என்றும் தகவல் வருகிறது.. 

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டு கள் உள்ள நிலையில், பதவி விலகுவதாக திடீரென அறிவித்தார். வரும் ஜனவரி 31 ஆம் தேதியன்று அவர் தனது பதவியிலிருந்து விலக இருக்கிறார். இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டி யில்   இதுவரை 5 பேருக்கு  மேல் பரிசீலனையில் உள்ளது. அதில் ஒருவர் டிரம்ப் மகள் இவாங்கா. இவருடன், ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, நிதித்துறை துணை செயலாளர் மால்பாஸ், ஐநா சர்வதேச வளர்ச்சி அமைப்பின்  தலைவர் மார்க் கிரீன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.

மாடலாக இருந்த இவாங்கா, பின்னர் தொழிலில் கால் பதித்தார். தந்தையின் நிறுவனத்தில் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்தவர், தற்போது வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

முன்னதாக 2017ஆம் ஆண்டில் உலக வங்கி, பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், 1 பில்லியன் டாலர்களை அளித்ததன் பின்னணியில் இவாங்கா ட்ரம்ப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்துக் கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”உலக வங்கித் தலைவர் பதவிக்காக சில பரிந்துரைகள் வந்துள்ளன. தகுந்த நபரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி  உள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கவர்னருடன் பணியாற்ற இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்

இரண்டாவது உலகப்போர் முடிவடையும்போது தொடங்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர் கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர். உலக வங்கியில் அமெரிக்கா மிகப் பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இது அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது சொந்த விருப்பத்தில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும். இதனால், இவாங்கா டிரம்ப் உலக வங்கியின் தலைவராக தேர்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.