2019-2020 க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு ஒரு மாதம் நீடிப்பு!

2019-2020 க்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு ஒரு மாதம் நீடிப்பு!

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நீட்டித்து அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் முந்தை நிதியாண்டுக்கான வருமான வரியை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் மத்திய அரசு அதை 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பல பட்டய கணக்கர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த அமைப்புகள் வருமான வரி தாக்கல் செய்வதில் பலவேறு சிக்கல்கள் உள்ளன. எனவே அதற்கான காலக்கெடுவை நீட்டித்தால் சரியான விவரங்களை அளித்து வருமான வரி தாக்கல் செய்ய உதவும் என்று வருமான வரித்துறைக்குக் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தற்போது 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2018-2019 நிதியாண்டு) வருமான வரி தாக்கல் காலக்கெடு 2019 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதால் வரி செலுத்துவோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

எனவே இந்த முறை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். எனினும் வருமான வரி தக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!