September 20, 2021

எல்லை மீறல் : ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

அண்மையில் நடந்த ட்விட்டர் வழியாகவும் நடந்த நேரடி ஒளிபரப்பில், லே பகுதியை சீனாவின் ஒரு பகுதி போல் காட்டும் வகையில் வரைபடத்தை காண்பித்த நிலையில் இது மிகவும் மோசமான போக்கு,, இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸிக்கு இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஜய் ஷானே காட்டத்துடன் கண்டனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அண்மையில் நாட்டிற்காக போராடி உயிரை இழந்த வீரர்களுக்கான நினைவிடமான ஹால் ஆஃப் ஃபேமில் இருந்து எழுத்தாளரும் தேசிய பாதுகாப்பு ஆய்வாளருமான நிதின் கோகலே ட்விட்டரில் நேரடி ஒளிபரப்பு ஒன்றை நடத்தினார். அப்போது அந்த வீடியோவில் காண்பிக்கப் பட்ட இடம் சீன மக்கள் குடியரசு ஜம்மு-காஷ்மீர் என்று குறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பிற பயனர்கள் படங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்புகளை லே என குறிக்கப்பட்டுள்ள இடத்துடன் பதிவேற்ற முயற்சித்தனர். ஆனால் இது பெரும் சர்ச்சையக் கிளப்பிய நிலையில் தொழில்நுட்ப பிரச்சினை என்று கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கி விட்டது.

இந்நிலையில்தான் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் அஜய் சாவ்னி, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளை தவறாக சித்தரிப்பது குறித்து அரசாங்கத்தின் எதிர்ப்பை தெரிவித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமையகம் லே என்றும், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டும் இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் அழிக்க முடியாத பகுதிகள் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் தனது கடுமையான கடிதத்தில் ட்விட்டருக்கு நினைவுபடுத்தினார். இத்தகைய தவறான விளக்கங்கள் மேடையில் அவமதிப்பைக் கொண்டுவருகின்றன மற்றும் அதன் நடுநிலை மற்றும் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்புகின்றன எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய குடிமக்களின் உணர்வுகளை மதிக்கும்படி மத்திய அரசு ட்விட்டருக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வரைபடங்களால் பிரதிபலிக்கப்படும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மீறும் வகையில் ட்விட்டர் எடுக்கும் எந்த முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சட்டவிரோதமானது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் கடிதத்தில் உள்ளதை ஒப்புக் கொண்ட ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், ட்விட்டர் நிறுவனம் சம்பந்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது மற்றும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.