விண்வெளிக்கு ரோபோ-வை அனுப்ப ஆயத்தமாகும் இஸ்ரோ!- வீடியோ!

விண்வெளிக்கு ரோபோ-வை அனுப்ப ஆயத்தமாகும் இஸ்ரோ!- வீடியோ!

கடந்த 2019-ம் வருஷம் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அவர்கள் நம் இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்று உரையாற்றினார். அந்த உரையின் விளைவாக விண்வெளிக்கு மனிதர் களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், முதலில் மனித உருவிலான ரோபோவை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ISRO 2022-ல் மனிதர்களை இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக 4 இந்திய விமானிகள் தேர்வாகி உள்ளார்கள். அவர்களுக்கு ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள் உடல் நிலையைக் கண்காணிக்க இந்திய விமான துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிரான்சில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். 2022 மனிதர்களுடன் இணைந்து வியோமித்ரா விண்வெளி செல்லுமா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக, விண்வெளிக்கு அனுப்ப மனித உருவிலான பெண் ரோபோவை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அறிமுக்கப்படுத்தி யுள்ளார். நடப்பு ஆண்டு இறுதிக்குள் இந்த ரோபோ விண்ணுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு அனுப்ப வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ரோபோவுக்கு ‘வயோமமித்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது. பெண் உருவம் கொண்ட இந்த ரோபோ மனிதர்கள் செய்யும் பல வேலை களை திறமையாக செய்யக்கூடியது; இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது. மனிதப் பண்புகளும் இருப்பதால் விண்வெளியின் மனிதன் சென்று வர ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என்பது குறித்தும் உணரக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தது ‘வியோமித்ரா.’ “நான் முதல் மனித உருகொண்ட ரோபோ. என்னால் விண்வெளி ஆராய்ச்சியாளர் களை அடையாளம் காணவும், அவர்களுடன் உரையாடவும், அவர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கவும் முடியும். ஆராய்ச்சியாளர்கள் செய்யும் வேலைகளான ஸ்விட்ச் பேனல் ஆபரேசன், ECLSS (Environmental control and Life Support System) வேலைகள், உஷார்படுத்தும் வேலை மற்றும் சக பயணியாகவும் என்னால் இருக்க முடியும்” என்று பேட்டி அளித்துள்ளது பாதி மனித உருக்கொண்ட வியாமித்ரா.

error: Content is protected !!