January 29, 2022

இஸ்ரோ புதிய தலைவராக சோமநாத் நியமனம்! – யாரிவர்? – முழு விபரம்!

ந்தியாவின் சார்பில் விண்வெளி மற்றும் வான்வெளி தகவல்களுக்கு தேவையான பின்னணியக் கொடுக்கும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தற்போது சிவன் செயல்பட்டு வருகிறார். அவரின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தலைவராக உள்ள சிவனின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிவடைய உள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சோமநாத் தலைவராக செயல்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (விஎஸ்எஸ்சி) தற்போதைய இயக்குநராக இருக்கும் சோம்நாத், கேரளாவைச் சேர்ந்தவர். கொல்லம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ள சோம்நாத், இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலையாக விண்வெளிப் படிப்பை முடித்துள்ளார். “structures, dynamics and control” பிரிவில் நிபுணத்துவம் கொண்ட இவர், 1985-ல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்துள்ளார்.

ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள், பைரோ அமைப்புகள், ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கண்காணித்து வந்ததுடன் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அதேபோல் GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கும் வகித்துள்ளார் சோம்நாத்.

சந்திரயான்-2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை சோம்நாத்தின் சாதனைகளில் முக்கியமானவை. இவரின் நியமனத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.