ஐ.எஸ்.ஆர். செல்வகுமார் இயக்கும் ”யாதெனக்கேட்டேன்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் ”யாதெனக் கேட்டேன்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கண்ணதாசனின் ”யாதெனக் கேட்டேன்” கவிதையை பிரதி பலிக்கும் இப்படத்தை ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகன்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கண்ணதாசனின் 93வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் கங்கை அமரன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.

ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் ஷனாயா, வைஷாலி, மாதவி உள்ளிட்ட மூன்று நாயகிகள் அறிமுகமாகிறார்கள். விஹான் இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிப்பு பயிற்சியாளர் சித்தன் கார்த்திஷ் மற்றும் சோலை நடிக்கிறார்கள்.

அனைவரும் பார்க்கக் கூடிய சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பொன் காசிராஜன், இசை விவேக்நாராயண். படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகுமென்று இப்படத்தின் இயக்குனர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் தெரிவித்துள்ளார் .

aanthai

Recent Posts

முகக்கவசத்திற்கு எதிராக வழக்கு போட்டவருக்கு அபராதம் – ஐகோர்ட் அதிரடி!

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி…

3 hours ago

இலங்கை அதிபர் ராஜபக்சே – சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சம்!

இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.…

4 hours ago

ஜம்மு காஷ்மீரில் தமிழக வீரர்கள் உட்பட 3 வீரர்கள் வீர மரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர்கள் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில்,…

6 hours ago

முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்ஸ் – மத்திய அரசு ஒப்புதல்

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல்…

1 day ago

பால்டிக் கடலுக்கு அடியில் ரசாயன ஆயுதங்கள்!- பேரழிவுக்கு வழி!

பால்டிக் கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள 1 லட்சம் டன் ரசாயன ஆயுதங்களால், இயற்கைக்கு பேரழிவு ஏற்படும் என்றும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

1 day ago

சபரிமலை பிரசாதம் : பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் = கேரள அரசு அறிவிப்பு!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை…

1 day ago

This website uses cookies.