July 28, 2021

ஐ எஸ் தீவிரவாதிகளான அநாதைக் குழந்தைகள்!அதிர வைக்கும்-வீடியோக்கள்

உலகின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பல்வேறு நாச வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறு வர்கள் முன்னிலையிலேயே கொடூரமாக கொலை செய்வது மட்டுமில்லாமல் அவர்களையும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். கடந்த மாதம் சிறுவன் ஒருவன் மூலம் காரை வெடிக்க செய்து பணையக்கைதிகளை தீவிரவாதிகள் கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

isis may 2

மேலும் ஈராக் , சிரியா போன்ற பகுதிகளில் இருக்கும் சிறுவர்கள் ஐ.எஸ். தீவிர வாதிகளை போன்று கொலை செய்வதையே விளையாட்டாக விளையாடுவது தொடர்பான வீடியோ வெளியாகியிருந்தது.

இந்நிலையில்தங்கள் வசமுள்ள இளம் வயதினர் வளர்ந்து வருகிறார்கள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக வீடியோ ஒன்றினை வெளி யிட்டுள்ளனர். இளம் வயதினரை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்ட தீவிரவாதிகள், அவர்களுக்கு ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது, கழுத்தறுத்து கொலை செய்வது என போன்ற பயிற்சிகளை வழங்கினர்.

பயிற்சிகள் தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வந்தனர். இவர்களில் ஏராளமான சிறுவர்கள் தாய், தந்தையர்களை இழந்த அநாதை குழந்தைகள் ஆவார்.இதையடுத்து, இச்சிறுவர்கள் இராணுவ சீருடை அணிந்து, போருக்கு தயாராகி விட்டனர் என்ற வீடியோவை ஐஎஸ் தீவிரவாதம் வெளியிட்டுள்ளது. அதில் பின்னணி இசை ஒலிக்க, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் போரிடுவதற்கு தயாராகிவிட்டோம் என்ற வாசகங்களுடன், அச்சிறுவர்களின் பயிற்சி காட்சிகள் இடம்பெறுகின்றன.

எங்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு எல்லாம் உங்களை பழிவாங்கும், உங்கள் வாழ்க்கை இனி எங்கள் கையில் உள்ளது போன்ற வாசங்கள் அந்த வீடியோ முழுவதும் இடம் பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=BlVOibJk3VM