நீங்க போற வாகன டிரைவர் குடிச்சிருக்காரா? அப்ப உங்களுக்கும் ரூ10 ஆயிரம் ஃபைன்!

நீங்க போற வாகன டிரைவர் குடிச்சிருக்காரா? அப்ப உங்களுக்கும் ரூ10 ஆயிரம் ஃபைன்!

குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்த்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய போக்குவரத்து விதி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும் போது, வழி விட தவறினால், அதற்கு இடையூறாக செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் எனவும் .அறிவித்துள்ளது.

AanthaiReporter Trffice Police New Fines – G.O (MS) No 758

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் தமிழகத்தில் 11,419 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 1026 பேர் சாலை விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் புது திட்டத்தையும் அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும், டிரைவர் குடிபோதையில் இருந்தால், அவர்களுடன் பயணிப்பேர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினால், அதற்கு இடையூறாக செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேசில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய போக்குவரத்து விதி நேற்று முதல் அமலுக்கு வந்து விட்டதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!