அதிமுக – பாஜகவின் கூட்டணி சாத்தியமா? சாபமா? இப்போதுள்ள உள்ள பிரச்சினைகள் என்ன?

அதிமுக – பாஜகவின் கூட்டணி சாத்தியமா? சாபமா?  இப்போதுள்ள உள்ள பிரச்சினைகள் என்ன?

அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதை முற்றிலும் விரும்பாத கட்சி திமுக. அதை எப்பாடு பட்டாவது தடுப்பது என்று பல வகைகளில் முயற்சிக்கிறது. அதற்காக பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று பல சிக்னல்களை திமுக கொடுத்தும் பாஜக அதற்கு தயாரில்லை. மருமகன் சபரீசன் பல முறை அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து இயலவில்லை. அதன் பின்னர் ஸ்டாலின் மோடியை சந்திக்க எடுத்த முயற்சிகள் பொய்த்தது. அடுத்து நிர்மலா சீதாராமனை சந்திக்க அண்ணாமலைக்கு எதிரான அணிகள் காய் நகர்த்தியதன் மூலம் அது நடந்துள்ளது. அதற்கு துபாய் முதலீடுகளில் மாட்டியதும், அந்த ஃபைல்கள் நிதி அமைச்சரிடம் இருப்பது இன்னொரு காரணம் என்போருமுண்டு..!

இப்போது பாஜக கூட்டணி அதிக இடங்களை தர திமுக தயார் என்று சிக்னல் கொடுத்துள்ளது. கூட்டணி அமைந்தால் ஓகே, இல்லாவிட்டல்.திமுக கொடுத்த சீட்டுக்களுக்கு இணையாக அதிமுகவிடம் பாஜக கேட்கும். அது கிடைக்காமல் போனால், அதன் மூலம் கூட்டணி உடைய வாய்ப்புகள் உண்டு. அடுத்து எடப்பாடிக்கு கொங்கு பகுதியியில் பாஜக கூட்டணி அமைந்தால் மட்டுமே வெல்லும் அளவிற்கு செல்வாக்கு. அது அவருக்கு பொய்த்துப்போனால், அடுத்ததாக வன்னியர்கள் குறிப்பாக சிவி சண்முகம் போன்றோர்கள் போட்டியாளராக கோலோச்ச வாய்ப்புகள் உண்டு. அதற்கு கூட்டணி உடைந்தால், மாற்று கூட்டணி மூலம் அவர்கள் கை ஓங்கும், எடப்பாடி கை இறங்கும். அப்போது அடுத்த தலைமைக்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். அதை செய்வதற்கு திமுக அவர்களுக்கு பெரியளவில், அதிமுகவினரின் ஈகோவை மீடியா மூலம் தூண்டி உதவுகிறது.

அடுத்து உள்ள மிகப்பெரிய பிரச்சினை OPS, TTD ஐ கூட்டணியில் சேர்ப்பது. அது தன் தலைமையை தக்கவைக்க நினைக்கும் எடப்பாடிக்கு ஏற்க முடியாத சூழல். இது இடியாப்ப சிக்கல். தினகரனை கூட்டணி என்ற வகையில் சமாளிக்கலாம். ஆனால் OPS க்கு இரட்டை இலை சின்னமே. அப்போது இரட்டை தலைமை தொடரும். OPS இடம் வாக்குகளை பிரிக்கின்ற அழிவிற்கு பெரும் செல்வாக்கு இல்லை என்றாலும், இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பவர் அவருக்கு அமைப்பாளர் என்ற ரீதியில் உள்ளது. அடுத்து முக்கிய விஷயம் தொகுதிகள். பாஜக 25 இடங்களை எல்லா கூட்டணி கட்சிக்கும் சேர்த்து.கேட்கிறது. அதில் OPS ம் அடக்கம். மீதி 15 தொகுதி அதிமுகவிற்கு என்பதை இன்று ஏற்றால், நாளை சட்டசபையில் குறைந்த பட்சம் 80 இடங்களை கோறும். காரணம் அதன் ஓட்டு சதவீதம் உயர்ந்துவிடும். அப்போது அதிமுகவிற்கு சட்டசபை தேர்தஇல் பாஜகவின் தேவை அதிகம் இருக்கும் பட்சத்தில், நெளிந்து, வளைந்து கொடுக்க வேண்டிய சூழல். அதனால் பாஜக, கூட்டணிகளுக்கு 16 இடங்களை தர சம்பதிக்கலாம். ஆனால் பாஜக ஏற்கும் நிலையில் இருக்காது.

எப்படி அமைய வாய்ப்புகள்?

பாஜக, கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்கள் கொடுத்து அதன் மூலம், இந்த தேர்தலில் திமுகவை மொத்தமாக மூடுவிழா செய்ய முடியும். அதன் மூலம் திமுகவை செயல்படாமல் முடக்கி, அடுத்த சட்டசபை தேர்தலில், மிண்டும் கூடணியாக போடியிட்டு, அதிமுக ஆட்சி அமைக்க முடியும். அப்போது பாஜக அதிமுகவை எதிர்ற்று எதிர்க் கட்சியாக செயல்படலாம். அதன் மூலம் செயலற்ற தத்தி தலைமையால் திமுகவை முக்தி அடையச்செய்ய முடியும்., திமுக சார்பு ஓட்டுக்கள் அதிமுக, அல்லது பாஜக பின்பு மாறும். அது அதிமுக செயல்படும் விதத்தில் பாஜகவின் எதிர்காலம் அமையும், பெரும்பாலும் 1931 ஆட்சி அமைக்கும். ஆனால் கண்டிப்பாக திமுகவிற்கு காரியம் செய்துவிடலாம். அதுதான் இரண்டு கட்சிகளும் விரும்புவது.

அது பொய்த்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?

பாஜக சிறிய கட்சிகளை கொண்டு நான்கு, ஐந்து சீட்டுக்களை ஜெய்க்கும் வாய்ப்புகள் உண்டு. அதிமுக இன்னும் சில இடங்கள் கூடுதலாக ஜெய்க்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் திமுக மீண்டும் ஓரளவிற்கு அதிக தொகுதிகளில் ஜெய்த்து பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அடையும். அதன் பின்னர் திமுகவின் ஆட்சி தொடரும் போதுதான் பாஜக வளர்ச்சி அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஓரளவிற்கு 26% வாக்கினை பெற வாய்ப்பு இருக்கும்
அது அடுத்த தேர்தலில் ஓரளவிற்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்றினால், பாஜக தேர்தலுக்கு பின்னால் அமித்ஷாவின் தேர்தல் மூலம் ஆட்சி அமைக்கக்கூட வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது இடத்தில் அதிமுக வந்தாலும், எடப்பாடி கைகள் சரியும் என்ற சூழலில், தொடர் தோல்வியை சந்திக்கும்போது, கட்சியை காப்பாற்ற அதிமுகவால் முடியாது போகும். ஆனால் பாஜகவிற்கு திமுக ஆட்சியினால் வரும் எதிர்ப்பை பயன்படுத்தி 1931 ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம்.

இப்போதைய நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிதான் எனும்போது, தேர்தல் மூலமோ, அல்லது அமித்ஷா தேர்தல் மூலமோ பாஜக தனக்கு தேவையான உறுப்பினர்களை சேர்க்கும் திறமை கொண்டது. அப்படியிருக்க, கூட்டணி அமைந்தால் அடுத்த சட்டசபையில் அதிமுக ஆட்சி, அமையாவிட்டால் திமுக ஆட்சி. ஆனால் 2026 ல் யார் ஆட்சி அமைத்தாலும், 2031 பாஜக ஆட்சி என்பது கிட்டத்தட்ட உறுதியானது. எனவே, எடப்பாடி உண்மை கள நிலவரத்தை வைத்து அனுசரிக்காவிட்டால், அதிமுகவின் எதிர்காலம் என்பது மட்டுமல்ல, அவரது எதிர்காலம் கேள்விக்கு உரியதுதான்.
விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை!

மரு.தெய்வசிகாமணி

error: Content is protected !!