திருவள்ளூர் கோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் & வாட்ச்மேன் ஜாப் ரெடி!

திருவள்ளூர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 7, ஆபிஸ் அசிஸ்டெண்டில் 48, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 13, டிரைவரில் 2, நைட் வாட்ச்மேனில் 10, மசால்சியில் 15, ஸ்வீப்பரில் 5ம் சேர்த்து மொத்தம் 100 இடங்கள் காலியாக உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் அதிக பட்சம் 30 வயதுக்கு உட்பட்ட வர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:
 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். டிரைவர் பதவிக்கு ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும், மூன்று வருட காலம் பணியனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். கணிப்பொறியாளர் பதவிக்கு கம்ப் யூட்டர் பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருப்பதோடு ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங் தெரிந்தவராக இருக்க வேண்டும். ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். சரியான தகவலை இணையதளத்தில் அறியவும், இதர பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: இந்த பதவிகளுக்கு வரும் விண்ணப்பங்கள் மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: 
பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீதிமன்றம் தொடர்புடைய பதவிகள் இவை என்பதால் முதலில் இணையதளத்திற்கு சென்று தேவைகளை முழுமையாக அறிந்து அறிவுறுத்தப்பட்டபடி மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள்,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருவள்ளூர் மாவட்டம்.

கடைசி நாள்
: 30.4.2019

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு