Exclusive

‘ இறுதி பக்கம்’ -விமர்சனம்!

புஷ்பா தங்கதுரை, சுஜாதா, ராஜேஷ் குமார் போன்றோரின் கொலை, போலீஸ், விசாரணை டைப்பிலான துப்பறியும் கதைகளைத் தேடித் தேடிப் போய் அனுபவத்தை கிளறி விட்டு விட்டது ‘ இறுதி பக்கம்’ படம். கதை என்னவென்றால் ஒரு பெண் நாவலாசிரியர் கொலை செய்யப்படுகிறார். அக் கொலையை விசாரிக்க ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் உதவியாக பெண் போலீஸ் கிரிஜா ஹரி நியமிக்கப்பட இருவரும் இணைந்து எப்படி துப்பறிந்தார்கள் என்பதுதான் கதை.

முழு படமும் என்னவோ ஒரு கொலையும் அதனை விசாரிக்கும் தருணங்களும் தான் என்றாலும் படம் பேசும் பொருள் கொஞ்சம் முக்கியமானதும் விவாதத்திற்குரியதும் கூட. இக்கால பெண்கள் சுதந்திரத்தை அவர்களின் பாலியல் சுதந்திரத்தையும் காதல் காமம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்ல முயன்றிருக்கிறது இந்தப்படம். படத்தின் தொடக்கக் காட்சியே எந்தவித சுற்றி வளைப்பும் இல்லாமல் கொலையில் ஆரம்பமாகிறது. கொலை நடந்த அடுத்த காட்சியில் விசாரணையும் ஆரம்பமாகி விடுகிறது அங்கேயே நம்மையும் படத்திற்குள் இழுத்து விடுகிறார்கள். ஆரம்பித்த சில காட்சிகளில் கொலை செய்த்வனையும் கண்டுபிடித்து விட்டாலும் ஏவியது யார் என்ற புள்ளியை வைத்துக்கொண்டு திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் இயக்குநர் மனோ வெ கண்ணதாசன்.

நடிகர்கள் அனைவரும் புதிது என்றாலும் படத்திற்கு தேவையானதை சரியாக செய்துள்ளார்கள். ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன் இருவரும் கலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக நாவலாசிரியர் ரோலில் வரும் அம்ருதா தனிக் கவனம் பெறுகிறார் அவருடன் லிவ் இன் பார்ட்னராக வந்த ஸ்ரீ ராஜும், காதலனாக வரும் விக்னேஷ் சண்முகமும் தங்கள் ரோலை உணர்ந்து அசத்தி இருக்கிறார்கள் .

ஒரு பெண்ணை பாலியல் சுதந்திரம் கொண்டவளாக காட்டுவதும் பல ஆண்களுடன் தொடர்பு கொள்பவளாகவும் காட்டுவதும், அவளை நாயகியாக காட்டுவதும், தமிழ் சினிமாவில் கத்தி மேல் நடப்பது போன்றது. ஆனால் அதை பார்வையாளனுக்கு அருவருப்பு வராமல் ஒரு பெண்ணின் கோணத்தில் அவளின் நியாயத்தை காட்டியதற்காக பாராட்டலாம்.

படத்தின் இசை படத்தோடு ஒட்டவில்லை. கேமரா படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளது.

படம் ஒரு நாவலை படிப்பது போன்று இருப்பதும் சினிமா பூச்சு இல்லாமல் கொஞ்சம் நாடகத்தன்மையுடன் இருப்பதும் மைனஸ்தான் என்றாலும் ஒரு கொலை விசாரணை படத்தில் யார் கொலையாளி என்பது தான் படம் ஆனால் அதை பார்வையாளன் யூகித்து விட்டால் படம் நிற்காது ஆனால் இப்படத்தில் அந்த விசயத்தில் ஜெயித்திருக்கிறார்கள் அடுத்தடுத்த க்ளுக்கள் போலீஸ் விசாரிக்கும் போது அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். க்ளைமாக்ஸில் நமக்கு ஆச்சர்யம் தந்து சஸ்பென்ஸை உடைத்திருப்பது அழகுக்காகவே இப்படத்தை கொண்டாடலாம்

மொத்ததில் இந்த இறுதிபக்கம் சகலருக்கும் பிடித்த த்ரில்லர்

மார்க் 3.5 / 5

aanthai

Recent Posts

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

3 hours ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

1 day ago

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்!

கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ விகிதம்…

1 day ago

சமந்தா & தேவ் மோகன் நடிப்பில் தயாரான ‘ஷாகுந்தலம்’, 3 டி – யில் ரிலீஸ்!

உலகப்புகழ் பெற்ற காளிதாசின்  'அபிஞான ஷாகுந்தலம்' எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும்  'ஷாகுந்தலம்' மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 days ago

“’ஆதார்’ படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி…

2 days ago

This website uses cookies.