September 24, 2021

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரை விமர்சனம்! =இன்னும் சுவையாக இருந்திருக்கலாம்!

அடிக்கடி நாவல் அல்லது நூல் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் கையில் ஒரு புது புத்தகம் கிடைத்ததும் அட்டையின் பின் பக்கத்தை முதலில் பார்த்து விட்டு அடுத்து அந்நூலின் பல்வேறு பக்கங்களை குத்து மதிப்பாக பார்வையிட்டு அதை பற்ரி ஒரு முடிவுக்கு வருவது வாடிக்கை. அது போன்றதொரு ஸ்டைலில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்றொரு படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குநர் மு. மாறன். தமிழ் வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகனாம். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில்  “Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட். (இதே பாணியை ரொம்ப ஃபர்பக்கெடாக செய்து சபாஷ் வாங்கிய படம் துருவங்கள் பதினாறு). சுமார் 2 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் சுஜாதா, பாலகுமாரன், சுபா, பட்டுக் கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுதிய துப்பறியும் நாவல்களின் பிரபல கதாபாத்திர பெயர்களை கேரக்டர் களுக்கு சூட்டியிருக்கிறார்கள் நாயகனுக்கு பரத், நாயகிக்கு ஷீலா என்ற பெயர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அஜ்மல் (கணேஷ்), ஜான் விஜய் (வசந்த்) பெயர்கள் சுஜாதா நாவல்களில் இருந்தும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் வைஜயந்தி, வித்யா பிரதீப்பின் அனிதா கதாபாத்திரங்கள் சுபா நாவல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாம்..

கதையில் வருவதென்னவோ ஒரேயொரு கொலைதான்.. அதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு லிங்கில் ஒன்று சேர்ந்து பார்ப்போரை குழப்பமால் தெளிவாக்குவதுதான் முழு படம்.. கொஞ்சம் விரிவாக சொல்வ தென்றால் பரத் (அருள்நிதி) கால்டாக்ஸி டிரைவர், அவரின் காதலி ஷீலா (மஹிமா நம்பியார்)தனியார் ஹாஸ் பிட்டல் நர்ஸ். இவர்களுக்குள் (வழக்கமான) காதல் போய் கொண்டிருக்கும் போது மஹிமாவுக்கு வரும் ஒரு பிரச்னையில் உதவியபடி அறிமுகமாகிறான் கணேஷ் (அஜ்மல்). பணக்கார வயதில் மூப்பானவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை பெண் சபலத்தால் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம், நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர்தான் அஜ்மல்.

இதை காட்டிக் கொள்ளாமல் ஆரம்பத்தில் ரொம்ப நல்லவனாக அறிமுகமாகி பின்பு நாயகி மஹிமாவையே மிரட்டி தன் வழிக்கு இழுக்கிறான். இதனிடையே மஹிமாவின் தோழியான ரூஃபிலா (சாயா சிங்) வையும் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுகிறான் அஜ்மல். இந்த இரண்டு பிரச்சனைகளும் அருள்நிதிக்குத் தெரியவர, அஜ்மலைத் தேடி கிளம்புகிறார். போய் பார்த்த ஸ்பாட்டில் ஒரு பெண் முன்னரே கொலையாகி இறந்து கிடக்க, அந்தக் கொலைப்பழி அருள்நிதி மேல் விழுகிறது. ஆனால் தன்னை நிரூபிக்க தப்பித்து போகும் அருள்நிதியைத் துரத்த, கொலையாளி அஜ்மலைத் தேடி அருள்நிதி ஓட, இடையிடையே சில பல வில்லன்கள் (ஆனந்தராஜ் & ஜான் விஜய்), வழியில் ரைட்டர் வையெயந்தி (லட்சுமி ராமகிருஷ்ணன்) குறுக்கிட.. இப்படி பாதையே இல்லாத குறுக்குச் சந்தில் முன்னும் பின்னுமாக வந்து போய் கிளைமாகில் இன்னொரு கொலையை நடப்பதுடன் படத்தை முடிக்கிறார்கள். ஆனால் பேஸ்புக் மூலம் நட்பாகி ஏமாற்றுவது, செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவது, அதையும் சிங்கில் பென் டிரைவில் வைத்து கொண்டு அலைவது என எக்கச்க்கமான படத்தில் வந்து போன விஷயங்கள் என்றாலும் ஒரு த்ரில்லர் படத்துக்குண்டான் விசேஷ மெனக்கிடலை முழுமையாக செய்திருக்கிறார்கள்.

அருள்நிதி  இறுக்கமான முகத்துடன் வந்து போகிறார்.. இன்னும் ஒரு கோர்ஸ் நடிப்பு பயிற்சிக்கு போய் வந்தால் டாப் லிஸ்ட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது. மஹிமா நம்பியார் அழகு தேவதை .கண்ணில் படும் பொதெல்லாம் கவர்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. சாயா சிங் வித்தியாசமான கூடவே வெயிட்டான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  வில்லானாக வரும் அஜ்மல் ரொம்ப பொருத்தமாக தன் வேலையை செய்து சபாஷ் வாங்குகிறார். . மற்றபடி சுஜா வருணி, வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் என மற்ற கதாபாத்திரங்களும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
மர்ம படத்தின் மெயின் இழையான பின்னணி இசையில் தனிக கவனம் செலுத்தியிருக்கும் சாம் சி.எஸ்., பாடல்களில் அந்தளவுக்கு அக்கறைக் கட்டவில்லை என்று தெரிகிறது.  அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷூம்தான் தனிக் கவனம் பெறுகிறார்கள்..
கொலை செய்வது குரூரம்தான் என்றாலும் அதை செய்து விட்டு தப்பிப்பவனும் , அதை கண்டு பிடிப்பவனுக்கான சேசிங் இன்னும் சுவையாக இருந்திருக்கலாம் என்று ஏங்க வைத்திருந்தாலும் பார்க்க தகுந்த படம்தான் இரவுக்கு ஆயிரம் கணகள்

மார் 5. 3
.