August 17, 2022

ஐபிஎல் :ஒத்தை ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது மும்பை டீம்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐ.பி.எல்.,ஃபைனலில் அட்டகாசமாக ஆடி கோப்பையை நான்காவது முறையாக மும்பை அணி கைப்பற்றி சாதனை படைத்து விட்டது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இத்தொடரின் மெகா பைனலில் ஜஸ்ட் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது மும்பை. விசில் போட வைத்த சென்னை அணி கூல் தோனி, வாட்சன் ரன் அவுட்களால்தான் தோல்வி அடைந்தது. மலிங்கா ரன்களை வாரிக் கொடுத்து இருந்தாலும், கடைசி ஓவரில் தன் அனுபவத்தைக் காட்டி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். நல்ல தரமான டி20 இறுதிப் போட்டியைக் கண்ட உற்சாகத்துடன் டி20 ரசிகர்கள் திருப்தி அடைந்தனர். சில சென்னை அணி ரசிகர்கள் 1 ரன் தோல்வியால் கண் கலங்கினர் என்பதும் உண்மை.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி-20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன், சீசன்-12 தொடர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி துவங்கியது. இதில், நடப்பு சாம்பியன் மும்பை, 2வது இடத்தைப் பிடித்த ஐதராபாத், மும்பை, டில்லி, பெங்களூரு, கோல்கட்டா, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் இடம் பெற்றன. போட்டிகள் முதலில் லீக் முறையில் நடந்தன. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை மோதியது. லீக் சுற்றின் மும்பை, சென்னை, டில்லி அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முறையே முதல் மூன்று இடத்தைப் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. அதே நேரம் கடும் போராட்டத்திற்கு இடையே ஐதராபபாத் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடித்து கடைசிய அணியாக ‘பிளே&ஆப்’ வாய்ப்பை உறுதி செய்தது. கோகட்டா, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் முதல் சுற்றுடன் வெறியேறின.

இதைத் தொடர்ந்து ‘பிளே-ஆப்’ சுற்றுகள் நடந்தன. இதன் முதலாவது தகுதிச் சுற்றில் சென்னையை வீழ்த்திய மும்பை பைனலுக்கு முன்னேறியது. அடுத்த நடந்த எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை டில்லி வீழ்த்தியது. இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் டில்லியை வீழ்த்திய சென்னை பைனலுக்கு முன்னேறியது.

இந்த மெகா தொடரின் பைனல், ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்ததில் இரவு 7.30 மணிக்கு துவங்கியது. இதில், நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்த்து மும்பை மோதியது. இரு அணிகளும் இதுவரை மூன்று முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளன. இதே போல் இவ்விரு அணிகளும் இதுவரை மூன்று முறை பைனலில் மோதி உள்ளது. இதில், இரண்டு முறை மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஒருமுறை முட்டுமே சென்னை வெற்றி பெற்று சாதித்தது.

லீக் சுற்றின் துவக்கத்திலிருந்தே சென்னை அணி வெற்றிகளை பெற்று வந்தது. அதே நேரம் துவக்கத்தில் சற்று தடுமாறிய மும்பை அணி பின் எழுச்சி பெற்று தொடர் வெற்றிகளை குவித்து வந்தது. நேற்றைய பைனலில் மும்பை அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப் பட்டது. காரணம் மும்பை அணி லீக் சுற்றில் சென்னையை இரண்டு முறை வீழ்த்தியது. அதோடு, முதலாவது தகுதிச் சுற்றிலும் சென்னையை வீழ்த்திய மும்பை ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. எனவே, கோப்பை கனவுடன் மும்பை களமிறங்க, பைனலில் சாதிப்போம் என்ற வெறியுடன் சென்னை இருந்தது.

பலத்த எதிர்பார்ப்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில், ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். மும்பை அணியில் ஒருமாற்றம் செய்யப் பட்டது. ஜெய்ந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்லீனகன் சேர்க்கப்பட்டார். அதே நேரம் சென்னை அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் அதிரடி துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 45 ரன் (4.5 ஓவர்) சேர்த்த நிலையில், ஷர்துல் தாக்கூர் வேகத்தில் குயின்டன் டி காக் (29) சரிந்ததார். இவரைத் தொடர்ந்து தீபக் சஹார் பந்தில் ரோகித் சர்மா (15) வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ சூர்யகுமாய் ராதவ் (15), இஷான் கிஷான் (23) சிக்கினர். குர்ணால் பாண்ட்யா (7) கைகொடுக்கவில்லை. 14.1 ஓவரில் மும்பை 100 ரன் எடுத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய போலார்டுடன் ஹர்திக் பாண்ட்யா இணைந்தார். இருவரும் சற்று அதிரடியாக விளையாடத் துவங்கினர்.

ஆட்டத்தின் 19வது ஓவரை தீபக் சஹார் வீசினார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (18), ராகுல் சஹார் (0) ஆட்டமிழந்தனர். மெக்லீனகன் (0) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். முடிவில் மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. போலார்டு 41 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) பும்ரா (0)அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சஹார் 3, ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு டுபிளசி அதிரடி துவக்கம் தந்தார். அதே நேரம் வழக்கத்திறண்கு மாறாக வாட்சன் நிதானமாக விளையாடி வந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33 (4 ஓவர்) சேர்த்த நிலையில், குர்ணால் பாண்ட்யா பந்தில் டுபிளசி ஆட்டமிழந்தார். இவர் 26 ரன் 913 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து வந்த ரெய்னா துவக்கத்திலிருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். மெக்லீனகன் பவுன்சரில் சிக்ய ரெய்னா, உடனடியாக 3வது நடுவர் உதவியை நாடினார். இதில், ரெய்னா தப்பித்த போதும் தீபக் சஹார் சுழலில் சிக்கி ஏமாற்றம் தந்தார். இதுவும் 3வது நடுவர் உதவி கோரப்பட்டது. ஆனால், இந்த முறை ரெய்னா ஆட்டமிழந்தது உறுதி செய்யப்பட்டது. ரெய்னா 8 ரன் மட்டமே எடுத்தார். இதற்கு முன்பாக வாட்சன் கொடுத்த எளிதான கேட்சை மலிங்கா தவறவிட மும்பை ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

அடுத்து வந்த அம்பதி ராயுடு (1) பும்ரா வேகத்தில் சரிய ஆட்டம் பரபரப்பானது. பலத்த கரகோஷத் திற்கு இடையே கேப்டன் தோனி களம் வந்தார். இவர் 1 ரன் எடுத்த நிலையில், தேவை இல்லாமல் ரன் அவுட் ஆக ஆட்டம் மும்பை வசம் சென்றது. ஆட்டத்தின் 16வது ஓவரை மலிங்கா வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் கிடைத்தது. இதன் பின் வாட்சன் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாச ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அதோடு 15.4 ஓவவரில் சென்னை 100 ரன் கடந்தது. மேலும், எழுச்சியுடன் விளையாடிய வாட்சன் 44 பந்தில் அரைசதம் அடித்தார். 4 ஓவரில் 42 ரன் தேவைப்பட்டது. 17வது ஓவரை வீசிய பும்ரா 4 ரன்னே விட்டுக் கொடுக்க 3 ஓவரில் 38 ரன் தேவைப்பட்டது.

ஆட்டத்தின் 18வது ஓவரை குர்ணால் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் வாட்சன் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாச ஆட்டம் சென்னை வசம் திரும்பியது. 2 ஓவரில் 18 ரன் தேவைப்பட பும்ரா பந்து வீச வந்தார். இந்த ஓவரில் பிராவோ (18) ஆட்டமிழந்த போதும் 11 ரன் கிடைத்தது. கடைசி ஓவரில் 9 ரன் தேவைப்பட மலிங்கா பந்து வீச வந்தார். இந்த ஓவரில் வாட்சன் 80 ரன் (59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ரன் அவுட் ஆக சென்னை ரசிகர்கள் உறைந்து போயினர். இருந்தும் முதல் 5 பந்தில் 7 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில், ஷர்துல் தாக்கூர் (2) எல்.பி.டபுள்யு., ஆனார். இதையடுத்து மும்பை 1 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. ஜடேஜா (5) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை தரப்பில் பும்ரா திகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். ஆட்டநாயகனாக தீபக் சஹார் தேர்வானார். வார்னர் (சிறந்த பேட்ஸ்மேன்), இம்ரான் தாகிர் (சிறந்த பவுலர்) விருது வென்றனர்.

இம்முறையும் ரசிகர்கள் ஹார்ட் பீட் கடைசி ஓவரில் எகிறி அடித்தது குறிப்பிடத்தக்கது.