November 28, 2021

”வாங்கண்ணா… வணங்கங்கண்ணா!” – அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளுக்கு பயணமாக, டில்லியில் இருந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டார். முதலில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பன் சென்று, அங்கு பிரதமர் அன்டோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனுக்கு பிரதமர் மோடி நேற்று வந்தார். விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கூடி, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் ஆப்பிள் கம்பெனி தலைமை நிர்வாகி டிம் குக், வால்மார்ட் டோக் மேக்மில்லன், கேட்டர்பில்லர் ஜிம் உம்பிள்பை, கூகுள் நிர்வாகி சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ள உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் மோடி பேசும் போது, “இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனே முக்கிய மானது. நாட்டின் நலனை பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது.இதற்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதலை உதாரணமாக கூறலாம். ( மோடி பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை). இந்த விவகாரத்தில் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்ட நாட்டை தவிர பிற நாடுகள் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. இது தீவிரவா தத்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

எனது ஆட்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்தும் மாற்றம டைந்துள்ள ன. வளர்ச்சியடைந்த இந்தியாவைப் பற்றிய அமெரிக்க வாழ் இந்தியர்களின் கனவு நிறைவே ற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தைவிட எனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சாலை களும், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே சரியான இடத்தில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.

புதிய இந்தியாவை பொறுத்தவரை இளைஞர்களே அதன் வெற்றி. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர்களே மிகப்பெரிய பலம். எப்போது அவர்களின் நம்பிக்கைகளுக்கு சரியான தலைவர்கள் கிடைக்கிறார்களே. அதுவே அவர்களை சாதனையடையச் செய்கிறது. நாங்கள் மக்களின் நம்பிக்கைகளுக்காக எங்களது கொள்கைகளை தக்க வைத்து கொள்கிறோம்.

கடந்த மூன்று வருடங்களில் உலகில் எந்த மூலையிலுள்ள இந்தியர்கள் துன்பப்பட்டாலும் அவர்களுது பிரச்சினைகளை தீர்பதில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.கடந்த 3 ஆண்டுகளில் உலகில் பல்வேறு இடங்களில் சிக்கிய சுமார் 80,000 பேரை இந்திய வெளியுரவுத் தூதரகம் மீட்டுள்ளது. மேலும் உலகிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தங்களுக்கு இந்திய தூதரகம் உதவும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாரஜை மோடி வெகுமாக பாராட்டிப் பேசினார். மேலும் இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த சூழலை தமது அரசு ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். இதுவரை 7 ஆயிரம் சீர்திருத்தங்களை தமது அரசு மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்த மோடி, இந்தியாவின் வளர்ச்சியால் இரு நாடுகளும் பயன்பெறும் என்றார்.நாடு முழுவதும் ஒரே விதமான வரியை அமல்படுத்த இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதனால் இதுவரை இருந்து வந்த வரிசிக்கல்களுக்கு முடிவு ஏற்படும் எனவும் மோடி தெரிவித்தார்.