March 26, 2023

சர்வதேச அளவில் ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவும் உயர பறக்கிறது!

கொரானா தாக்கத்தில் உலக பொருளாதாரம் முடங்கிப் போனது, அதன் பின் Backlog என்பது அதிகமாக இருந்தது. அதனால் தேவை (Demand) ஐ (Supply) பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அதுதான் உண்மையான புதிய வளர்ச்சி என்று எல்லா நிறுவனங்களும் புதியதாக பலரை வேலைக்கு அமர்த்தியது. டிமாண்ட் அதுகமாக, இரண்டு மடங்குவரை சம்பளத்தை உயர்த்தி கொடுத்தது. அதன் மூலம் மிக அதிகமாக உற்பத்தியை செய்து விற்பனைக்கு கொண்டுவர. அதை வாங்க ஆட்கள் இல்லாததால், அது தவறான கணிப்பு என்று வர்த்தக உலகம் புரிந்துகொண்டது. ஆனால் ஏதாவது வகையில் அது உயரும் என்று நினைத்தார்கள். அது நடக்கவில்லை.

அப்போது உக்ரைன் போர் வ்ந்தது, அதை வைத்து சப்ளை இல்லாதது போல ஒரு மாயயை ஏற்படுத்தி அதை டிமாண்டை செயற்கையாக உயர்த்த நினைத்தார்கள். ஆனால் ஏற்கனவே இருந்த Excessive Stock தீரவில்லை. இது போன்ற காலங்களில் அதை வைத்து கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி செயற்கையாக டாலர் டிமாண்ட் கிரியேட் செய்து, அமெரிக்கா டாலரில் பிரிண்ட் செய்துகொள்ளும். மறுபக்கம் விலைவாசி உயரும் என்று பொருட்களை வாங்கி வைப்பார்கள்.

ஆனால் இந்த முறை கச்சா எண்ணெய் சப்ளையை ரஷ்யா தன்னிச்சையாக அதிகரிக்க, அமெரிக்காவின் தந்திரம் பலிக்கவில்லை. அது மட்டுமில்லாமல் அமெரிக்க டாலருக்கு பதிலாக BRICS நாடுகளின் கரன்ஸியை, குறிப்பாக இந்திய ரூபாயை 36 உலக நாடுகள் பயன்படுத்தியது. அதனால் மிக வேகமாக உயர்ந்த டாலர் ஏற்றம் நின்றது. அதுமட்டுமில்லாமல் ரஷ்யாவின் பணமான 30 பில்லியன் டாலர் அமெரிக்க வங்கிகளில் இருந்தது. உக்ரைன் போரினால் அந்த பணத்தை, ரஷ்யாவை தீவிரவாத நாடு என்று அறிவித்து அதன் அந்தஸ்தை வீழ்த்தி, OFAC மூலம் அந்த வங்கிகளில் இருந்து அந்தன்பணத்தை எடுக்க முடியாதபடி அறிவித்தது. அதனால் ரஷ்யாவின் பணத்தை அமெரிக்கா பலல் கொள்ளை மூலம் கபளீகரம் செய்தது. இது ஒரு தார்மீகத்திற்கு எதிராக, முற்றிலும் பொருந்தாத மிக மோசமான ஃப்ராட் என்பதால் உலக நாடுகள் தற்போது தங்கள் அமெரிக்கோவில் இருக்கும் சேமிப்பு ஆபத்தானது என்று உணர துவங்கிவிட்டார்கள்.

அதனால் அந்த நாடுகள் தங்களது சேமிப்பை பொருளாதார சூழலை முன்வைத்து வெளியே எடுக்க துவங்கிவிட்டது. மேலும் நாளை அமெரிக்கா நமக்கு எதிராக நமது சேமிப்பையே குப்பையாக்கிவிட்டால், என்ன செயவது என்ற பயம் எல்லா நாடுகளுக்கும், குறிப்பாக சீனாவிற்கு மட்டுமல்ல, ஜப்பானுக்கு கூட வந்துவிட்டது. இதுவரை அமெரிக்காவின் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பை நம்பி இருந்த ஜப்பான், தனது படைகளை பெருக்க திட்டமிட்டு அதில் மிகப்பெரிய முதலீடுகளை செய்ய துவங்கிவிட்டது. அதுமட்டுமிலலாமல் ஒவ்வொரு நாடும் தங்களது ரிசர்வ் கரன்ஸியாக டாலரை பயன்படுத்தியது. உதாரணமாக இந்தியாவின் Foreign Reserve இப்போது ~650 பில்லியன் டாலராக இருக்கிறது. நாளை டாலரின் மதிப்பு வீழ்ந்தால், அது குப்பையாகிவிடும் அல்லவா? அப்போது அந்த நாடுகள் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் என்பதால், அந்த டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்க ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக சீனா அந்த டாலர்களை தங்கமாக மாற்றிக்கொண்டு உள்ளது. ஏனெனில் நாளை தாய்வான் மீது தாக்கினால் ரஷ்யா நிலைதான் நமக்கு என்பதால் அது இந்த மாற்றத்தை செய்கிறது. இந்தியாவு. அந்த வழியே செல்வது என கொள்கை அளவில் முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த பணத்தக் என்ன செய்வது? அதன் காரணமாகத்தான் சீனா உலகத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு கடன் கொடுத்து அதில் மீட்டர் வட்டி போட்டு வாங்குகிறது. ஏனெனில் அமெரிக்கா கொடுப்பது 1 1/2% வட்டி, ஆனால் டாலரின் மதிப்புணர்வு மூலம் அது சமன் செய்யப்படும் என்ற நிலை மாறி, 80 ஆண்டிகளில் முதன் முறையாக அது வீழும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல அமெரிக்காவில் பெரும் முதலீடு செய்த நாடுகள், அதை திரும்ப எடுக்க வழியை தேட ஆரம்பித்துவிட்டது. அதில் உள்ளா சிக்கல் என்பது வேறுவிதமானது. ஜப்பான், சீனா போன்ற நாடுகள் தங்களது முதலீட்டை வெளியே எடுத்தால் டாலர் மேலும் சரியும். அப்போது அமெரிக்காவில் செய்த ரியல் எஸ்டேட் போன்ற பெரும் முதலீடுகளுக்கு பிரச்சனை ஆகிவிடும் என்பதால், சீனா போன்ற நாடுகள் திரிசங்கு நிலையில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளியாக தவிக்கிறது. எனவே அமெரிக்காவின் நேர்மையற்ற கருங்காலித்தனத்தால் அதன் நம்பிக்கை சரிந்து விட்டது. இனி அதன் வருங்கால சரிவு இருக்கும் என்பது அமெரிக்காவின் படைபலத்தை மட்டும் சார்ந்ததல்லை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், ரஷ்ய, சீனாவின் பலத்தையும் பொருத்தது.

அதனால் உடனடி மாற்றாக தங்கம் மட்டுமே இருக்கும் என்பதால், உலக பணக்கார நாடுகள் தங்கள் சேமிப்பை தங்கத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம். அது அமெரிக்க.$ மேலும் பலமாக வீழ்த்துவது மட்டுமல்ல, தங்கத்தின் விலை தாறுமாறாக உயரவும் வாய்ப்புகள் அதிகம்! இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், அதன் மறுபக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் எனும்போது அது டாலரின் இழப்பை சரி கட்டும் அளவிற்கு இருக்குமா என்ற கேள்வி எழும். இருந்தாலும் ஒரு ஸ்பைக் வர வாய்ப்புகள் அதிகம். அப்போது உயரும் விலை மீண்டும் அதிகரிக்காமல் இருக்கலாம், ஆனால் குறைய வாய்ப்புகள் குறைவு.

இங்கே இன்னொரு விஷயம் இந்தியாவின் ₹ யின் வாங்கும் திறனை அமெரிக்க $ உடன் ஒப்பிட்டால் அதன் மதிப்பு ₹22 ஐ விட குறைவு. அதாவது உண்மையான மதிப்பு இப்போது இருக்கும் விலையில் கிட்டத்தட்ட 1/4 என்றால், அதன் பரிமாற்றத்தில் உள்ள மதிப்புத்தான் எனும்போது நாம் டாலர் வர்த்தகத்தை குறைக்க குறைக்க அந்த வித்தியசம் பஇப்படியாக குறையும். அதாவது இன்னும் 10 வருடங்களில் அந்த நிலையை எதிர்பார்க்கலாம்.

இங்கே இன்னுமொரு முக்கியமான விஷயம் அமெரிக்க அரசை மட்டுமல்ல அதன் நிறுவனங்களை பெரும் பிரச்சினையில் வீழ்த்தும். சமீபத்தில் டாடாவின் Air India 840 விமானங்களை (இது 450 என்பதல்ல) வாங்க நீண்ட நாள் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் முடிய குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும். அப்போது அதன் டால்ர் விலை இருபக்கம் வீழ, மறுபக்கம் இந்திய ரூபாயும் உயர, அந்த நிறுவனங்களால் அந்த விலைக்கு உற்பத்தி செய்யவே முடியாது என்ற நிலை ஏற்படும்.

அப்படியெனில் அந்த நிறுவனங்கள் மற்ற ஒப்பந்தத்தில் வரும் லாபத்தை டாடாவிற்கு கொடுக்க வேண்டும் அல்லது ஒப்பந்தத்தை மீற வேண்டியிருக்கும். எது செய்தாலும் அமெரிக்காவிற்கு பெரிய நஷ்டமும், பிரச்சினையும் அதன் நம்பகத்தன்மையை இழப்பும் ஏற்படும். அந்த சூழலில் போயிங் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய நிற்வனத்தின் கட்டுப்பாட்டில் வரும். நஷ்டமாகும் நிறுவனத்தில் முதலீடு செய்து என்ன செய்ய முடியும்? ஜாகுவார் என்ற நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியபின், டாடாவின் கார்கள் அதனிடம் இருக்கும் டெக்னாலஜியை பயன்படுத்தி உயர்ந்தது ஒரு கண்கூடான உதாரணம்! அந்த சூழல் ஏஏபடும் என்பது நமக்கே தெரிகிறது என்றால் அவர்களுக்கு தெரியாதா? அப்படியெனில் அவர்களின் நிறுவனத்தை உயரத்தில் இருக்கும் டாலரை இப்போது இந்தியாவில் முதலீடு செய்து, நாளை அதை சமாளிக்க முடியும் என்பதால் Make In India மிக பலமாக வலுவடையும்.

இப்போது புரிகிறதா, இன்னும் நஷ்டத்தில் இயங்கும் டாடா ஏன் 800+ அதிகமான வைமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்கிறது என்று. சரி, டாடா ஏன் இந்திய அரசுக்கு செவி சாய்க்க வேண்டும்? இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் அம்பானி, அதானி போன்ற நிறுவனங்கள் அதை ஏற்கனவே செய்துவருகிறது. அதனால் பயனும் அடைகிறது எனும்போது டாடாவும் ஏன் செய்யாது?

மொத்தத்தில் டாலரின் வீழ்ச்சி என்பது அமெரிக்காவின் வீழ்ச்சியே! ஏர் இந்தியா மட்டுமல்ல இந்தியாவும் உயர பறக்கிறது!

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்..

மரு. தெய்வசிகாமணி