June 24, 2021

இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ பி) போலீஸ் வேலை வேணுமா?

மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ, துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.துப்பறியும் பிரிவில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 3 மே 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

ib mar 18

டெபுடி டைரக்டர், டெபுடி சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர், ஜீனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிடங்கள் பணியிடங்கள்

ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணிக்கு – 161 காலியிடங்கள்

டெபுடி டைரக்டர் பணிக்கு – 2 காலியிடங்கள்

டெபுடி சென்ட்ரல் இன்டலிஜென்ஸ் ஆபீசர் பணிக்கு – 3 காலியிடங்கள் மொத்தம் 166 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி –

12ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் ராணுவம், மத்திய காவல் படைப் பிரிவில் பணி அனுபவம் உள்ளவர்கள், மாநில காவல் துறை பணியில் உள்ளவர்கள் மற்றும் தகுதி படைத்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு –

முன் பதிவு செய்யப்படாத மற்ற அனைத்து பிரிவினர்களும் 21 வயதிலிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 3 மே 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற இணையதள முகவரியை அணுகவும்.