September 18, 2021

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஜாப்!

சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலையில் காலியாக உள்ள பணிகளுக்கு அதலெடிக்ஸ், பாடி பில்டிங், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

icf jan 24

பணிப்பிரிவு விளையாட்டுகள் விவரம்:

1. Level – 5 With pay Rs.29,200 (6வது ஊதியக்குழுவில் ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800) பிரிவில் காலியிடங்கள்:

அதலெடிக்ஸ் – 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டம் – 1 இடம்.

பளு தூக்குதல் – 59 கிலோ, 74 கிலோ மற்றும் 120 கிலோ – 1 இடம்.

விளையாட்டு தகுதி:

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது உலகக் கோப்பை போட்டி/ உலக சாம்பியன்ஷிப் போட்டி/ ஆசிய விளையாட்டுப் போட்டி/ காமன்வெல்த் போட்டிகளில் இளநிலை அல்லது முதுநிலை பிரிவில் விளையாடி குறைந்த பட்சம் 3வது இடம் வந்திருக்க வேண்டும்.

2. Level – 2 Pay Rs.19,900 பிரிவில் காலியிடங்கள் (6வது ஊதியக்குழுவில் ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800).

அதலெடிக்ஸ் – 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டம் – 1 இடம்.

பாடி பில்டிங் – 55 கிலோ, 70 கிலோ, 75 கிலோ – 1 இடம்.

கபடி – லெப்ட் கவர், ரெய்டர்/ ஆல் ரவுண்டர் – 2 இடங்கள்.

கைப்பந்து – சென்டர் பிளாக்கர், ஆல் ரவுண்டர், அட்டாக்கர் – 1 இடம்.

பளு தூக்குதல் – 59 கிலோ, 74 கிலோ மற்றும் 120 கிலோ – 1 இடம்.

கூடைப்பந்து – பார்வர்டு – 2 இடங்கள்.

விளையாட்டு தகுதி:

உலகக் கோப்பை/ உலக சாம்பியன்ஷிப்/ ஆசிய விளையாட்டுப் போட்டி/ காமன்வெல்த் போட்டி அல்லது உலக ரயில்வே அணி, பல்கலைக்கழக அணிகள், போட்டிகளில் சீனியர் அல்லது ஜூனியர் அளவில் குறைந்தபட்சம் 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விளையாட்டு தகுதியை பெற்றிருப்பவர்கள் கீழ்க்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:

1. Senior Clerk:

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

2. Junior Clerk/ Technician Grade III:

பிளஸ் 2 தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் ஐடிஐ தேர்ச்சி.

வயதுவரம்பு:

1.1.2017 தேதிப்படி  18 முதல் 25க்குள்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ரூ.250. இதை FA &CAO/ICF என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாகவோ அல்லது போஸ்டல் ஆர்டராகவோ எடுத்துக் கொடுக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தனித்தனியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
அதலெடிக்ஸ், பாடிபில்டிங், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மார்ச் 7ம் தேதியும், கபடி, கைப்பந்து, பவர் லிப்டிங் ஆகிய விளையாட்டுகளுக்கு மார்ச் 8ம் தேதியும் சோதனைகள் நடைபெறும்.

விளையாட்டுத் திறன், நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆந்தை வழிகாட்டி   என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதன் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Perssonel Officer/G,
Integral Coach Factory,
CHENNAI- 600038.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.2.2017.