இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது.
மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ள நிலையில், இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்து ள்ளனர்.இதனால், விமானம் கடலில் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாகவும், விமானத்தில் பயணித்த அனைவரும் நீரில் மூழ்கியிருக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
Video of civilians finding small parts from the Sriwijaya Air flight SJ182 that departed from Jakarta, Indonesia #sj182 #SriwijayaAir pic.twitter.com/sxt8o1xsW5
— HzKv (@HZLABZ) January 9, 2021