October 24, 2021

இந்தோ – பாக் கிரிக்கெட்- விதண்டாவாதமா?…..வியாபாரமா??

இன்று சன்டே என்பதால் தத்துபித்து……இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது………. இந்தோ – பாக் கிரிக்கட் – விதன்டாவாதமா…..வியாபாரமா? ஒரு நண்பர் இன்று காலை போஸ்டாக பதிருந்தார்…. இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சை கரெக்டா கமர்ஷியல் எண்ணத்துடன் சன்டே அன்று வைத்து ஆட வைத்து சில்லரைகளை பார்க்கும் கார்ப்ரேட்கள் அந்த கிரிக்கட்டின் வெற்றி தோல்வியை கூட ஆடு வைக்காமல் இருப்பார்களா என்று? பல முறை பாகிஸ்தானுக்கு பணிக்காரணமாக சென்று வந்து முறையில் கூறும் உண்மை என்ணாவென்றால் முதல் முறை கராச்சி விமான நிலையத்தில் இறங்கிய போது இனம் புரியா ஒரு பட்டாம்பூச்சி வயிற்றில் ( அது புளிய கரைக்கும் எஃபக்ட்னு கூட டீஸன்ட்டா சொல்லலாம்)….

ஏன்னா முதல் முறையா அரசு பயணம் என்றாலும் விசா அப்ளை செய்த போது பாகிஸ்தான் தூதுவர் அப்ளிகேஷனை பெண்டிங்கில் வைத்து நேரில் இன்டர்வியூக்கு வரணும்னு சொன்னதால் நேராக போனபோது அருமையான இஞ்சி டீ கொடுத்து, ரவி நீங்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு வருகை புரிவது எங்களுக்கு மகிழ்ச்சி ஆனால் இந்த கார்கில் யூத்தம் முடிந்த இந்த தருவாயில் நீங்கள் செல்ல தயாரா? அப்படியெனில் எங்களுக்கு விஸா கொடுப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என கூறி என் முகத்தை உற்று நோக்கினார் சிரித்து கொண்டே நாமெல்லாம் கஸின் பிரதர்ஸ்தானே என்று சொன்னவுடன் ஒகே விசா கிரான்ட்டட் என்று கூறி 20 நிமிஷத்தில் விசா ஸ்டிக்கரை ஒட்டி கொடுத்தார்…. அவர் கேட்ட அந்த கேள்வி கராச்சி நிலைய விமான நிலையத்தில் இறங்கிய பிறகு கொஞ்சமா டர்னு சொல்ல முடியாது ஆனாலும் ஒரு காபரா உடம்பில் டாபராவாக ஆட்டியது.

சரி நாமெல்லாம் கைபுள்ளை சமூகத்தின் மூத்த இனமடானு கூட வந்த பிரிட்டிஷ் சிட்டிசனிடம் தெரிவித்து பயம் இல்லாத மாதிரியே அவரை தனியா ஒரு லைனிலும் நான் ஒரு நாலு ஆளுங்க எக்ஸ்ட்ராவா இருக்கு லைனிலும் நின்று அவர் பாஸ் பண்ணின பிறகு நாம அசிங்கபட்டுக்கலாம் (இஃப் அனவாயடபில் சிட்டிவேஷன்) அப்படியே லைன் நகர நாம எந்த லைன்ல நிக்கிறமோ அந்த லைன் ( அது சின்ன வயசில டோக்கன் போட்டு பால் வாங்கும் லைன் முதல் அனைத்து நாட்டு இமிகிரேஷன் லைன் வரா) கொஞ்சம் மரண ஸ்லோவாகதான் போகும்னு நினைச்ச அன்னைக்கு பார்த்து ஆப்பு வச்சாச்சு என் மூட நம்பிக்கைக்கு…. சும்ம சரசரனு வேகமா என் லைன் முன்னேற என்னடா சோதனைனு சரினு என் டர்ன் வர பாஸ்போர்ட்டை எடுத்து பவ்யமாய் அந்த ஒசாமாவின் கஸின் போல பெருத்த தாடி வைத்த இமிகிரேஷன் ஆப்பிஸரிடம் கொடுக்க அவர்… ஓஹ் ஹிந்துஸ்தானி அப்படினு பார்த்தார் நாமும் நமக்கு தெரிந்த எல் போர்ட் உருதுவில் ஹான் சாப் என செப்ப டப்புனு ஏன் எதுக்குனு கூட கேக்காம‌ சீல் போட்டு நெக்ஸ்ட்ட்னு என்னை அனுப்பிட்டார்.

அதே சமயம் என்னைக் கிலியாக்கிய என் சீனியர் கொலீக் பிரிட்டிஷ் சிட்டிசனை அங்கே சல்லடையில் யானையை சலிக்கும் வகையில் நல்ல நாலு பேர் கேள்வி கேட்டு செம்மையா செஞ்சுகிட்டிருந்தாங்க அந்த ஆப்பிஸர்ஸ் சிரிசிகிட்டே நகர்ந்தா கஸ்டம்ஸ் லைன் பழனி மலை ரோப் கார் போல நிக்க அந்த லைனில் கடைசியா நிக்க எத்தனிக்கும் போது இன்னொரு கஸ்டம்ஸ் ஆப்பிசர் பாஸ்போர்ட் பார்த்து தரம் பிரித்து கொஞ்சம் பெரிசா / பெரிசா கொஞ்சமா உள்ள லைன்களில் நிக்க வைக்கு ஆள் என் பாஸ்போர்ட் பார்த்து சீல் செக் செய்து ஒகே ஆப் சலோ இஸ் சைடு மேனு டைரக்டா திருப்பதி வைகுண்டம் வாசல் வழியா என்னை அனுப்பி வச்சாரு 6 அடிக்கும் பல இஞ்ச் அதிகமா இருந்த பட்டானி சூட் போட்ட ஒரு பெரியண்ண்ணா ஒரு சல்யூட்டோடு ஆனா அவர் பட்டாணி காஸ்டுயும் அல்மோஸ்ட் மூச்சாவை என்ட் பாயின்டுக்கு கொண்டு வந்திடுச்சு எனக்கு…. டாய்லெட் போய்ட்டு என் லக்கேஜை எடுத்து எங்கடா நம்ம பிரிட்டிஷ் பாஸ்னு பார்க்க அவரை நிறைய கொஞ்சமான லைனில் அமுக்கி வச்சிருந்தார் அந்த பட்டானி டிரஸ் போட்ட பெரியண்ணா……. நைஸ்னு மனசுல நினைச்சு சந்தோஷபட்டேன் அந்த பயணம் முழுவதும் பல பாகிஸ்தான் அரசு / தனியார் / காரோட்டி / அப்படினு பல பேர்கிட்ட தைரியமா இந்துஸ்தானினு சொன்ன உடனே அவர்களின் மலர்ந்த முகம் ஆவோ பாய்னு அனைச்ச அந்த ஊரில் நீங்க நினைக்கிற மாதிரி விரோத தன்மை துளியளவும் இல்லை இது இந்த பயணம் மட்டுமல்ல அதற்க்கு பிறகு சென்ற லாகூர் / ராவல்பின்டி / இஸ்லாமாபாத்திலும் இதே அரவனைப்பு தான்.

சரி நாம டைட்டிலுக்கு வருவோம்………..ஆனா ஊனா பாகிஸ்தானுக்கு போ, அவா எல்லா டீவரவாதி, நினைச்சா கிரிக்கெட் விளையடலாம் நினைச்சா விளையாட முடியாதுனு கிச்சிமுச்சி காட்டும் பிசிசிஐ டகுல் பாச்சா ஐசிஐயிடம் பலிக்காதுங்குப்பு, நம்ம நாட்டில் வேணா அவங்களை சேர்க்க நம்ம ஐபில் எல்லில் முடியாது கிரிக்கட் விளையாட முடியாது சொல்ற இந்த ஆளுங்க அன்னிய நாட்டில் விளையாடினா ஒகே ஒகே தான் காரணம் இந்த விளையாட்டை பெரியண்ணா அளவில் நிர்வாகிப்பது ஐசிஐ என்னும் நிறுவனம் தான் அதனால அவங்கள பகைச்சிகிட்டா இந்தியா டீம் வெறும் ஐபில் மட்டும் தான் வாழ் நாள் முதல் விளையாட முடியும் என்பதால் இந்தோ பாக் கிரிக்கட் ஒரு அரசியல் “அக்ரகப்டரா” ரகம் தான் அப்பூ

இனிய சன்டே வாய்த்துக்குள்