October 22, 2021

ஆசியா சாம்பியன் ஹாக்கி ; பாக்.கை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கிப் போட்டி மலேசியாவில் உள்ள குயான்டன் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

hockey oct 31

இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான் அரை இறுதியில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடியது. இதில் 2011-ம் ஆண்டு கோப்பையை வென்றது. 2012-ம் ஆண்டு பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போதும் இந்தப் போட்டியில் இந்திய அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மலேசியாவின் குவான்டன் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஆகாஷ் சிக்டே களமிறங்கினார்.ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாட, ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. 7-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை கோல் கம்பத்துக்கு வெளியே அடித்து வீணடித்தார் ஜஸ்ஜித் சிங்.

12-ஆவது நிமிடத்தில் பாகிஸ்தான் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட, 18-ஆவது நிமிடத்தில் 2-ஆவது முறையாக இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரூபிந்தர் பால் சிங் கோலாக்கினார்.இதன்பிறகு 25-ஆவது நிமிடத்தில் ரமன்தீப் சிங் கொடுத்த கிராûஸ பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார் யூசுப் அஃபான். இதனால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தான் கடும் போராட்டத்துக்குப் பிறகு 26-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கோலடித்தது. இந்த கோலை முகமது அலீம் அடித்தார். இதன்பிறகு உத்வேகம் பெற்ற பாகிஸ்தான் 38-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை அலி ஷான் அடித்தார்.

இதன்பிறகு ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட, 51-ஆவது நிமிடத்தில் சர்தார் சிங் கொடுத்த பாûஸ பயன்படுத்தி கோலடித்தார் நிகின் திம்மையா. இதனால் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது. இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில், இந்தியா சாம்பியன் ஆனது.இந்தத் தொடரில் ரூபிந்தர் பால் சிங் 11 கோல்களை அடித்தார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக கோலடித்தவர் என்ற பெருமையை அவர் தட்டிச் சென்றார்.

மலேசியாவுக்கு 3-ஆவது இடம்:

மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசிய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவைத் தோற்கடித்து விட்டது.