June 14, 2021

ஓரினச் சேர்க்கை – மரணத் தணடனைக்கு உட்பட்டதல்ல – ஐ.நா. வாக்கெடுப்பின் ரிசல்ட்!

மனித குலம் தொடங்கியதிலிருந்து ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு பரவலாக பலசான்றுகள் இருந்தும் வருகிறது. இப்பழக்கம் ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து வந்திருக்கிறது. இப்பழக்கம் பல காலங்களில் போற்றப்பட்டும், பல காலங்களில் தூற்றப்பட்டும் இருந்து வருகிறது. இப்பழக்கம் கிரேக்க நாட்டுப் பழக்கத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் பல உண்டு. நீரோ மன்னன் ஒரு ஆணையே மனைவியாக வைத்திருந்ததற்கு கதை உள்ளது. இதுபோன்று ரோம் நாட்டில் ஒரு வீரனுக்கு அழகாகவே ஒரினச் சேர்க்கை பழக்கம் கருதப்பட்டது. இதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

இப்பழக்கம் உலகம் முழுவதும் கிறிஸ்தவ சபை உருவானபின்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் செக்ஸின் முக்கியத்துவம் கருத்தரித்தல் மட்டுமே, எனவே ஆண் ஆண், பெண் பெண் உறவு தவறு என்று போதிக்கப்பட்டது. இந்நிலை இந்த நூற்றாண்டின் நடுப்பதிவரை நீடித்து வந்தது. ஆனால் இந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பழக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கப் பட்டது. 1962-ல் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகவே இப்பழக்கம் அங்கீகரிக்கப்பட்டது. இப்படியான உறவுகள் தப்பல்ல என்றார்கள். இங்கிலாந்தில் 1967-ல் இப்பழக்கம் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, இப்பழக்கம் தவறானதல்ல என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இயற்கைக்கு மாறானது ஓரினச்சேர்க்கை என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் ஓரினச்சேர்க்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன

இந்த நிலையில் இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்று ஐநாவில் சமீபத்தில் நடைபெற்றது. 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் வாக்களித்தனர்.ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உட்பட்டது அல்ல என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 27 நாடுளும், எதிராக இந்தியா, சீனா, அமெரிக்கா, 13 நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியாவின் முயற்சி வீண் ஆனது. அதிகபட்ச வாக்குகள் அடிப்படையில் ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உட்பட்டது அல்ல என தீர்மானம் ஐ. நா. வில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியாவில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

ஆண்களின் எண்ணிக்கையில் 34% ஆண்களிடம் ஒரினச்சேர்க்கை பழக்கம் இருக்கிறது. இவர்கள் அதாவது ஒரு ஆண் இன்னொரு தன்னை ஒத்த ஆண் மூலமாக சுயஇன்பம் போலவோ, அல்லது உணர்ச்சி தூண்டலோ அடைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பெண்களில் 15 லிருந்து 18% வரை வாழ்க்கையின் ஒரு முறையாவது உணர்ச்சி தூண்டுதலை பிற பெண்களிடமிருந்து பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.இதில் 5% சதவீதம் பேர் தொடர்ச்சியாக ஓரினச்சேர்க்கையில் மட்டும் ஈடுபட்டு வருபவர்கள்.