March 26, 2023

இந்திய பாஸ்போர்ட் வேல்யூ இப்ப கொஞ்சம் ஜாஸ்தியாகிடுச்சு!

சர்வதேச அளவில் அதிக நாடுகளுக்கு குறைந்த விசா கெடுபிடிகளுடன் செல்ல உதவும் பாஸ் போர்ட்டுகள் பட்டியலில், யூ ஏ இ பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த அரேபிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகின் 190 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா எடுக்காமல் செல்லலாம். இந்தப் பட்டியலில் இந்தியா 67வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

உலகில் உள்ள 199 நாடுகளின் பாஸ்போர்ட்கள் தர வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த பட்டியலில் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணிப்பவர்கள் அதிகமாக வெளிநாட்டிற்கு பயணிக்கும் மக்கள், ஒரு நாட்டின் மக்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் நாடுகளின் எண்ணிக்கை, ஆன் அரைவல் விசா வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இந்த தரவரிசை பட்டியலிடப்படுகிறது.

இதில் கடந்த 2015ம் ஆண்டு தரவரிசையில் 77 வது இடத்தில் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. கடந்தாண்டு 68 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 67 வது இடத்தில் உயர்ந்து இருக்கிறது. இந்திய மக்கள் விசா இல்லாமல் வந்து செல்ல 25 நாடுகள் அனுமதிக்கின்றன. அவர்கள் அந்த நாட்டிற்கு செல்ல இந்தியாவின் பாஸ்போர்ட் இருந்தால் மட்டும் போதும். மேலும் 39 நாடுகள் ஆன் அரைவல் விசா எனப்படும் அந்த நாட்டிற்கு சென்று அங்கு தான் இந்திய குடிமகன் என்ற ஆவணத்தை சமர்பித்தாலே அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. இவை ஒரு நாட்டு மக்களின் மூலம் அந்த நாட்டிற்கு அதிக வருமானம் வரும்பட்சத்தில் தான் வழங்கப்படும்.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அதிகம் செலவு செய்வது அந்நாட்டின் வருமானத்திற்கு வழி வகுப்பதால் இந்த சலுகைகள் அந்நாடுகளால் இந்தியா மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தங்களது பல தடைகளை தளர்த்தி உள்ளது அவர்கள் இந்திய சுற்றுலா பயணிகள் நுழைவதில் இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது , மூன்றாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தால், 189 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லலாம். 2017ம் ஆண்டில் 85வது இடத்தில் இருந்த சீனா, 69 வது இடத்திற்கு இந்த ஆண்டு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபால் 94வது இடத்திலும், பாகிஸ்தான் 102வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது