January 30, 2023

ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ரேகா!…

KC.ரேகா…

46வயது; 4குழந்தைகளின் தாய்..

கணவர்: P.கார்த்திகேயன்..

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்.. தனது கணவரோடு மீன் பிடிக்க சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில்.. இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்..!

அந்த அனுபவம் குறித்து கேட்ட போது, ““முதலில் என் கணவர் சிறிய கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். அவர் கரைக்கு வந்த பின்பு மீன்களை பிரித்தெடுக்க நான் உதவுவேன். அடுத்து பைபர் படகு வாங்கினார். அப்போது அவருக்கு உதவி செய்ய கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டார்கள். அந்த ஆட்கள் ஒழுங்காக வேலைக்கு வராததால், நானும் கணவரோடு கடலுக்கு செல்லவேண்டியதானது. நாங்கள் மூன்றுபேர் படகில் பயணிப்போம். ஒருவர் என்ஜினை இயக்குவார். இரண்டு பேர் வலைவீசுவோம். அலை குறைவாக இருக்கும் நாட்களில் நானும், என் கணவரும் மட்டும் செல்வோம்” என்றார், ரேகா.

அதே சமயம் கடலுக்குள் சென்ற முதல் அனுபவத்தை கேட்டபோது, “முதல் அனுபவத்தை நினைத்துக் கொண்டிருந்தால், கடலுக்குள் செல்லவே விருப்பம் இருக்காது. முதல் நாள் மீன்பிடிக்கவே முடியவில்லை. எனக்கு கட்டுப்படுத்த முடியாத வாந்தி ஏற்பட்டது. வாந்தியில் ரத்தம்கூட வந்தது. என்னால் நிற்க முடியவில்லை. அலையின் ஏற்ற இறக்கத்தில் படகு செல்லும்போது நிற்பதற்கு பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறினேன். எப்படியோ முதல் நாள் தட்டுத்தடுமாறி கரை சேர்ந்தேன். வீட்டில் இருக்கும் கஷ்டத்தை நினைத்தபோது, முதல் நாள் பட்ட அவஸ்தை எல்லாம் மறந்து போனது. அதனால் மறு நாளும் கடலுக்கு சென்றேன். காலப்போக்கில் வாந்தி நின்றுவிட்டது. அதிகாலை மூன்று.. நான்கு மணிக்கெல்லாம் மீன் பிடிக்க செல்லவேண்டிய திருக்கும். மதியம் இரண்டு மணிக்குத்தான் திரும்பி வர முடியும்” என்றார்.

ஒரு வழியாக கேரள மாநில மீன் வளத்துறையிடமிருந்து(State Fisheries Department) ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம்(Licence) பெற்ற கையோடு தனது கணவரோடு இணைந்து,தங்களுக்கு சொந்தமான சிறிய, பழைய படகில் தனது குடும்பத்தை காக்க, இப்போது அன்றாடம், 20/30 மைல் தூரம்(Nautical Miles) அரபிக்கடலின் ஆழமான பகுதிகளில் மீன் பிடிக்க சென்று வருகிறார் ரேகா என்ற இந்த பெண்மணி..

இதனிடையே பெண்ணுக்கு கடலில் வேலையில்லை. அவள் கரையில்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை திருத்தியிருப்பவர் ரேகா. அதனால் இவர் கேலிக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகவும் செய்திருக்கிறார். “ஊரில் பலர் நிறைய விமர்சனம் செய்தார்கள். பெண் கடலில் இறங்கினால் கடல் அழிந்துபோகும் என்றார்கள். பெரிய பிரச்சினைகள் உருவாகும் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் பத்து வருடங்களாக கடலுக்குள் போய்க்கொண்டிருக் கிறேன். கடல் அழியவில்லை. மீன்களும் நிறைய உற்பத்தியாகிக்கொண்டுதான் இருக்கின்றன..”என்றார்.

தற்போது எந்தவித நவீன கருவிகளும் இல்லாமல் ஆழ்கடலில் பயணிக்கும் போது,”எங்களை கடலம்மா பாதுகாப்பார்”என்ற குறிப்பிடுகிறார் ரேகா…

Central Marine Fisheries Research Institute (CMFRI)இயக்குனர், .கோபாலகிருஷ்ணன்,” காயல்களிலும், ஆறுகளிலும் மீன் பிடிக்க செல்லும் பெண்களை நாங்கள் அறிவோம்; ஆனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் முதல் பெண்மணி,ஒரே பெண்மணி #KC #ரேகா தான் என்பதை,நாங்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறோம்”என்ற குறிப்பிட்டுள்ளார்…

#ShahulHameed