October 19, 2021

போதை-யில் ஹெவி காட்டத்தை நாடும் யூத்ஸ்!

இந்த போதைப் பொருட்களில் மது, ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும். இன்று இது எல்லோருக்கும் எளிமையாகவும், பரவலாகவும் கிடைத்துவிடுகிறது.இந்த போதைப் பொருட்களை உட்கொள்வதால் பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் இன்மை, செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இந்த பழக்கத்துக்கு அடிமையாவதால் வாலிபர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்றால்…* ஆரம்பத்தில் குறைந்த அளவில் குடியை ஆரம்பித்து, பின் சிறிது சிறிதாக இந்த போதைப்பழக்கம் அவர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

driknks oct 13

* எதை இழந்தாலும், தங்களுக்கு போதை தரக் கூடிய பொருளை வாலிபர்கள் இழப்பதில்லை. அந்தந்த நேரத்தில் போதை கிடைக்கும் விதமாக, வாலிபர்கள் தங்களுக்கு பார்த்துக் கொள்கிறார்கள். அதை முன்னரே வாங்கியும் வைத்துக் கொள்கிறார்கள்.

* இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று வாலிபர்கள் பலமுறை சபதம் எடுத்தாலும், அதில் தோல்விதான் அடைகிறார்கள்.

* இந்த போதைப் பழக்கத்திற்கு வாலிபர்கள் அடிமை ஆவதால், அவர்களது படிப்பில் மதிப்பெண்கள் திடீரென குறையத் தொடங்கி விடுகிறது.

* இந்த போதைக்கு அடிமையான வாலிபர்கள், அடிக்கடி வீட்டில் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள்.

இந்த பழக்கம் முதலில் பள்ளிப் பருவத்தில் அல்லது கல்லூரியில் படிக்கும் போது தீய நண்பர்களால் ஏற்படுகிறது. பின் இது, பொழுதுபோக்காக மாறுகிறது. அநேகர் இந்த பழக்கத்தை விட்டு மீளமுடியாமல் தவிக்கிறார்கள். மேலும் இதை குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால், உடலில் உள்ள உறுப்பான கல்லீரலிலை சென்றடைகிறது. இதனால் நாளடைவில் மஞ்சள் காமாலைநோய் வருகிறது. கல்லீரலானது செயல் இழந்து போகிறது. மேலும் அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவையும் இதனால் ஏற்படுகிறது.

இந்த மது பரிமாறல்களை, மேலை நாட்டுக் கலாச்சாரம் எனவாலிபர்கள் உயர்வாகக் கருதுவதும், இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது. மேலும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை, போதைப்பழக்கத்தா  மறந்து நிம்மதியாக இருக்கலாம் என்று பலர் தவறாகக் கருதுகிறார்கள். இளம் வயதில் பழகிக் கொள்ளும் இத்தகைய போதைப் பழக்கங்கள், மெல்ல மெல்ல வாலிபர்களை, அடிமையாக்கி விடுகிறது.

இந்நிலையில் இனிப்பூட்டும் சுவையுடன் மது அருந்தும் ரசனை இந்திய பாரம்பரியத்தில் இருந்து மறையத் தொடங்கி, காட்டமான சரக்குகள் மீது மோகம் அதிகரித்து வருவதாக உலகின் தலைசிறந்த மதுக்கலவை மன்னன் தெரிவித்து உள்ளார். பதமான ருசியுடன் சரக்கை கலப்பது எப்படி என்பதுதான் பார்டென்டரர் எனப்படும், ஸ்டார் ஓட்டல்களில் உள்ள மது கலக்கும் நிபுணர்களின் திறமையாகும். இருப்பது என்னவோ பிராந்தி, விஸ்கி, ஜின், ரம், வோட்கா என சில சரக்குகள் தான். ஆனால், எதனுடன் எதை சேர்த்தல், உடலுக்கும், மனதிற்கும் சுருதி ஏற்ற முடியும் என்பது பிரம்ம வித்தை என இவர்கள் கூறுகின்றனர்.

இதற்காக லட்சக்கணக்கில் மாத சம்பளம் பெறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வியில், இந்த படிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.மது வகைகளில் பலவித கலவைகளை கலந்து தருவதில் ‘மோனின்’, எனும் துபாய் நாட்டு நிறுவனம் உலகப் புகழ் பெற்றதாகும். அந்த நிறுவனத்தின் சார்பில், ஆண்டுதோறும், ‘மோனின் கப்’, எனும் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா இறுதி போட்டிகள் நடக்கவுள்ளது.

முன்னதாக, தகுதிச் சுற்று போட்டிகள் பல நாடுகளில் நடந்து வருகிறது. டெல்லியில் நடந்த தகுதிச் சுற்றுக்கான தேர்வுப் போட்டியில், நாட்டிலுள்ள பல ஸ்டார் ஓட்டல் மற்றும் பிரபல பார்களில் சரக்கு கலக்கும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். சரக்குகள் கலவை தயாரிப்பதில் உலகின் நம்பர் 1 நிபுணராக கருதப்படும் மோனின் நிறுவனத்தின் விளம்பரத் தூதரான ஆன்றியா பிடோரா, பார் டென்டர்களிடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் சிறந்த சரக்கு கலவையாளரை தேர்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிடோரா பேசுகையில், ‘‘மது பானங்கள் இனிப்பாக அருந்த வேண்டும் என்பது இந்தியர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் வாடிக்கை. ஆனால், சமீபகாலங்களில், இந்தியர்கள் தங்களது சுவையை காரசாரமான, ‘காட்’டான ருசிக்கு மாற்றத் தொடங்கி உள்ளனர். இது நாடெங்கும் பரவத் தொடங்கி உள்ளது. விஸ்கி தான் எனக்கு பிடித்த சரக்கு என காலம் காலமாக அனுபவித்து வந்த இந்தியர்கள், இப்போது ஜின், வோட்கா ஸ்ட்ராங்க் சரக்குகளுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்’’, என்கிறார்.