இந்தியாவிலே தண்ணீர் பஞ்சம் தீரவே தீராதாம்! – தேசிய வானிலை மையம் தகவல்

இந்தியாவிலே தண்ணீர் பஞ்சம் தீரவே தீராதாம்!  – தேசிய வானிலை மையம் தகவல்

சமீப காலமாக எதிர்பாராத அளவில் தண்ணீர் பற்றாகுறையில் அவதிபடும் இந்தியன் தற்போது எதிர் கொள்ளும் ஆபத்தான பிரச்சனை மாசுபட்ட குடிநீர் சமீபத்தில் நீர்வள அமைச்சகம் அறிக்கைபடி இந்தியாவின் தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக ஆகி வருகிறது என்று பயமுறுத்துகிறது. இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகிவிட்டது . அது மட்டும் அல்ல நமது தண்ணீரில் இரும்புதாது அதிகமாகிவிட்டது என்கிறது நீர்வள அமைச்சகம் . அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது , உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம்,

water may 7

ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்துவிட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் . தண்ணீரால் பரவும் நோய் அதிகமாகிறது, இதனால் சுமார் பதினைந்து லட்சம் பேர் மடிந்து போகின்றனர். நாட்டில் தண்ணீர் தட்டுபாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்நிலையில் எதிர்காலத்தில் 100க்கு மேற்பட்ட சதவீத மழை பெய்தாலும் கூட, இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் தீராது, என்று லண்டனில் இயங்கும் வாட்டர் எய்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கும் பருவ மழைக் காலத்தில் 106% அளவுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து லண்டனில் இருந்து இயங்கும் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பருவ மழை காலத்தில் போதிய மழை பெய்வது மட்டுமே குடிநீர் பஞ்சத்தை சரி செய்துவிடாது என்று கூறியுள்ளது. இது குறித்து வாட்டர் எய்ட் இந்தியாவின் தலைவர் நித்யா ஜேகப் கூறுகையில், “இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகளும், அணைகளும் வறண்டு போயுள்ளது. கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும், பெரும்பாலான ஆற்றுப் படுகைகள் 75 சதவீதம் அளவுக்கு வறண்டுபோயிருப்பதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டு வீசிய கடுமையான வெயில், பருவ மழை தவறுதல் போன்ற காரணங்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் மட்டம், நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெயில் அளவு போன்றவற்றால் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!