தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

தாஜ்மஹால் இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ்பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ்மஹாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக்கொண்டு 1631 முதல் 1654ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது.

மேலும், இந்திய அரசின் புள்ளிவிவரப்படி இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஜ்மஹாலை பார்வையிடுவதாகவும், அதேநேரத்தில் மற்ற உலக அதிசய தளங்களை ஒப்பிடும்போது தாஜ்மஹாலுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தாஜ்மஹாலுக்கு ஆண்டுக்குச் சராசரியாக 80 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்  இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே தாஜ்மகாலின் அழகை ரசிக்க அனுமதிக்கப்படுவர். 40 ஆயிரம் டிக்கெட்டுகளுடன் முன்பதிவு நிறுத்தப்படும். தாஜ்மகாலை பராமரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 20 ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஆனால் வெளிநாட்டவருக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

error: Content is protected !!