நம்மூரில் ஓடும் ரயில்களில் மசாஜ் பார்லர் வசதி1 – மோடி அரசு முடிவு!

நம்மூரில் ஓடும் ரயில்களில் மசாஜ் பார்லர் வசதி1 – மோடி அரசு முடிவு!

அமைதியாக இருந்து ஆளை கொல்வதில் மன அழுத்தம் முதன்மையானது. தற்போதைய அவரச உலகில் அனைவருக்கும் மன அழுத்தமானது அழையா விருந்தாளியாக வருகிறது. அதிலும் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்ற வற்றால் மன அழுத்தமானது அதிகரிக்கிறது. இத்தகைய மன அழுத்தத்தை சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவை சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணி மசாஜ் தான். இதைக் கவனத்தில் கொண்டு இந்தியன் ரயில்களில் மசாஜ் மையங்களை திறக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது!

இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது மசாஜ். பழங் காலத்தில் இருந்தே மசாஜ்க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.  இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மசாஜ் நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புக்கு நலம் பயக்கிறது.  இதனால் நெடுந்தூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதுவாக மசாஜ் சென்டர்களை ஓடும் ரயில்களிலேயே அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. விமானங்களில் மூச்சு திணறல் ஏற்படுவதால் நோயாளிகள் பலர் ரயில்களிலேயே நீண்ட தூர பயணங்களை கடக்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது நீண்ட தூர பயணிகளுக்கு கலைப்பு தெரியாமல் இருக்க ரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய இரயில்வே முன்வந்துள்ளது. கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதி ரயில் களில் இரவு 10 மணி துவங்கி காலை 6 மணி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் கிடைக்கெப்பறும் இந்த மசாஜ் சேவைக்கு 100-லிருந்து 300 வரை வசூளிக்கப்படுகிறது.

அடுத்த 15 அல்லது 20 நாட்களில் நடைமுறைக்கு வரும் இந்த சேவை முதற்கட்டமாக இந்தூரில் இருந்து மத்தியபிரதேசம் செல்லும் 39 இரயில்களில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரயில்களில் 5 மசாஜ் ஊழியர்கள் வரை பயணிப்பர் எனவும், இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அணிந்திருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!