ஐ.பி. எல். ; கிரிக்கெட் இன்று முதல் கோலாகலம்!

ஐ.பி. எல். ; கிரிக்கெட் இன்று முதல் கோலாகலம்!

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 10வது சீசன், ஐதராபாத்தில் இன்று இரவு கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில், இம்முறை மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதவுள்ளன. மே 14ம் தேதி வரை நடைபெறும் லீக் சுற்றில் மொத்தம் 56 ஆட்டங்கள் நடக்கின்றன. இதன் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் குவாலிபயர், எலிமினேட்டர் போட்டிகளில் மோத வேண்டும். இறுதிப் போட்டி மே 21ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

ipl apr 5.a

ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் கைகலக்கின்றன. கடந்த சீசனின் இறுதிப் போட்டியிலும் இதே அணிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விராத் கோஹ்லி தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருவதால், பெங்களூர் அணி தற்காலிகமாக ஷேன் வாட்சன் தலைமையில் களமிறங்குகிறது. சன்ரைசர்ஸ் அணி டேவிட் வார்னர் தலைமையில் விளையாடுகிறது. இரு அணிகளிலுமே அதிரடி வீரர்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதால், முதல் ஆட்டமே ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் அனைத்தும் சோனி சிக்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது.

எட்டு அணிகளின் முதல் உள்ளூர் ஆட்டங்களின்போதும் பிரத்யேகமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளன. அரசியல், திரையுலக பிரபலங்கள், பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.கிரிக்கெட் வாரியம் சார்பில் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லஷ்மண், சேவக் ஆகியோர் இன்று கவுரவிக்கப்பட உள்ளனர்.

Related Posts

error: Content is protected !!