இப்பல்லாம் இந்தியர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுக்கவே ஆர்வம் காட்டுறாங்களாம்!

தற்போதைய காலச்சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் குழந்தை பேறு பாக்கியமில்லாதவர்கள், வாரிசு இல்லாத முதியவர்கள் தங்களை பார்த்து கொள்வதற்காக மற்றவருக்கு பிறந்த குழந்தையை தத்தெடுத்து கொள்வது வழக்கம். பழங் காலத்தில் இப்படி தத்தெடுப்பது எந்தவித சட்ட விதிமுறையுமில்லாமல் இரு குடும்பங்கள் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இருந்தது. குழந்தை இல்லாதவர்கள் வேறொரு குழந்தையை தத்தெடுத்த பின், அவர்களுக்கு வாரிசு பிறக்கும் பட்சத்தில் சொந்த குழந்தை மீதுள்ள பாசத்தால் வளர்ப்பு குழந்தையை கைவிடும் சூழ்நிலை உருவாகியது. இதில் தத்தெடுத்த குழந்தை சொந்த பெற்றோரிடத்தில் சென்றாலும், தத்தெடுத்தவருடன் வாழ முடியாமல் வீதியில் நிற்க வேண்டிய பரிதாபம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், தத்தெடுப்பை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கும் நோக்கத்தில் இந்திய அரசு தத்தெடுத்தல் சட்டம் அமல்படுத்தியது. இந்நிலையில் சிறுவர் களை விட பெண் குழந்தைகளை பாரமரிக்க எளிதாக இருப்பதால் பெண்குழந்தைகளை தத்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே இந்தியர்கள் அதிகளவில் விரும்புவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வெளியான புள்ளிவிவரத்தின்படி,2013 – 14 ஆண்டில், 3,924 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். அதில், 2,293 பேர் பெண்; 1,631 பேர் ஆண் 2014 – 15 ஆண்டில், 3,988 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டதில், 2,300 பேர் பெண்; 1,688 பேர் ஆண் 2015 – 16 ம் ஆண்டில், 3,011 குழந்தைகள் தத்துகொடுக்கப்பட்டதில், 1,855 பெண்; 1,156 பேர் ஆண்.2016 – 17 ம் ஆண்டில் 3,210 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டதில், 1,915 பெண்; 1,295 பேர் ஆண்.2017 – 18 ல் 3276 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டதில் 1,858 பேர் பெண்;1,418 பேர் ஆண்.

இதுகுறித்து சி.ஏ.ஆர்.ஏ. அமைப்பு தெரிவித்திருப்பதாவது: நாட்டிலேயே பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2016-17 ம் ஆண்டுகளில் இந்தியாவில் 3,210 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 1.195 பேர் பெண்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண் குழந்தைகளை தத்து எடுப்பதில் முதலிடத்தில் மகாராஷ்டிரா (711), 2 -ம் இடத்தில் கர்நாடகா (252), 3-ம் இடத்தில் மேற்குவங்கம் (203) உள்ளன.

2017-18 ஆண்டில் நாடு முழுவதும் தத்தெடுக்கப்பட்ட 3,276 குழந்தைகளில் 1,858 பேர் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 ஆண்டுகளில் சிறுவர்களை தத்தெடுப்பதை காட்டிலும் பெண்குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரித்துள்ளது. சிறுவர்களை காட்டிலும் பெண் குழந்தைகளை பராமரிப்பது எளிதாக இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர் என ஆய்வில் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சராசரியாக 20 குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் உள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இந்த மையத்தின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. இதுவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தையை அதிகளவில் தத்தெடுப்பதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அது சரி..குழந்தையை தத்து எடுப்பது எப்படி? குழந்தையை தத்து எடுப்பது எப்படி? யார் யார் தத்தெடுக்க முடியும்?

21 வயதுக்கு மேற்பட்ட, புத்தி சுவாதீனமுள்ள எந்த ஆணும் தத்தெடுக்கலாம். அவர் திருமணமானவராக இருந்தால் மனைவியின் சம்மதத்துடன்தான் தத்தெடுக்க முடியும்.

21 வயதுக்கு மேற்பட்ட, மணமாகாத, மணவிலக்குப் பெற்ற, கணவரை இழந்த, புத்தி சுவாதீனம் உள்ள எந்தப் பெண்ணும் தத்தெடுக்கலாம்.

தத்தெடுக்க எங்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?

யாருக்கும் பணம் கொடுக்க வேண்டியதில்லை, தத்தெடுக்க உதவும் நிறுவனம் குழந்தையைப் பராமரித்து வந்திருந்தால் அந்தப் பராமரிப்புச் செலவை, அந்த நிறுவனத்திடம் கொடுக்கலாம். இது எவ்வளவு என்பதை நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன

எவ்வளவு காலம் ஆகும்?

தத்தெடுப்பது தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளை செய்து முடிக்க குறைந்தது 3 மாத காலம் ஆகும்

அந்த நடவடிக்கைகள் என்னென்ன?

சட்டத்தின் பார்வையில் தத்தெடுத்தல் இரண்டு வகை:

1.இந்தியப் பெற்றோர்கள், அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்வது. இது In- Country Adoption எனப்படும்.

2.இந்தியர்கள் அல்லாதவர்கள் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்வது. இதற்கு Inter Country adoption
தத்தெடுத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

வெளிநாட்டு பிரஜைகள் தத்தெடுக்க (Inter Country adoption):

1. உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, குழந்தை நல முகமை (Child Welfare Agency – CWA)யிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் CWA உங்கள் குடும்பத்தைப் பற்றிய சில விவரங்களைக் கோரும். ஒரு சமூக நல ஊழியர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை அளிப்பார். இந்த அறிக்கைக்கு Home study Report (HSR) என்று பெயர். உங்கள் குடுமபப் பின்னணி, குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள உறவு நிலை, தம்பதிகளின் பணி விவரங்கள், உடல் ஆரோக்கியம், பொருளாதாரப் பின் புலம், இந்தியக் குழந்தையை ஏன் தத்தெடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பது போன்ற தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெறும்.

3.இந்த அறிக்கையும், உங்கள் விண்ணப்பமும், உங்கள் நாட்டில் உள்ள, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம் (Indian Placement Agency) ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நிறுவனம் அறிக்கையைப் பரிசீலித்து, உங்களுக்கு ஏற்ற குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்.

4.அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை ஆகியவை உங்கள் நாட்டில் உள்ள, நீங்கள் முதலில் விண்ணப்பித்த CWAக்கு அனுப்பி வைக்கப்படும்.

5.அவர்கள் உங்களை அழைத்துக் குழந்தையின் புகைப்படம், மருத்துவ அறிக்கை இவற்றைக் காண்பிப்பார்கள். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் தத்தெடுக்க உதவும் இந்திய நிறுவனம், இந்திய அரசின் அனுமதி பெற்று, உரிய நீதிமன்றத்தில் குழந்தையின் பாதுகாவலராக (guardian) உங்களை நியமிப்பதற்கான பணிகளைத் துவக்கும். நீதி மன்றங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நியமனங்களை அளிக்க வேண்டும்.

6. நீதிமன்ற ஆணை கிடைத்ததும், தத்தெடுக்க உதவும் நிறுவனம், குழந்தைக்கான பாஸ்போர்ட், விசா இவற்றிற்கு ஏற்பாடு செய்யும். அவை கிடைத்ததும் குழந்தையை நீங்கள்வந்து கூட்டிச் செல்லலாம். அல்லது தகுந்த துணையுடன் குழந்தை உங்களிடம் அனுப்பி வைக்கப்படும்.

7.பாதுகாவலர் என்ற முறையில்தான் குழந்தை உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அது உங்கள் நாட்டிற்கு வந்த பின், உங்கள் நாட்டுச் சட்டங்கள்படி நீங்கள் அதை தத்தெடுத்துக் கொள்ளலாம்.
தத்தெடுக்க உதவும் நிறுவனத்திற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம். உங்களிடம் அனுப்பும் முன் குழந்தை அவர்களது பராமரிப்பில் இருந்திருந்தால் அதற்கான பராமரிப்புச் செலவை அவர்களுக்கு நீங்கள் அளித்தால் போதுமானது.

இந்தியப் பிரஜைகள் தத்தெடுக்க (in country adoption)

1.நீங்கள் தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். தன்னார்வ ஒருங்கிணைப்பு நிறுவனத்தின்
முகவரி:
Voluntary Co-ordinating Agency:
No. 5, 3rd Main Road,
West Shenoy Nagar,
Chennai-600 040.

தமிழகத்தில் பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை http://www.tn.gov.in/adoption/regform.htm முகவரியில் காணலாம். அது PDF கோப்பாகவும் கிடைக்கிறது.

2. உங்கள் விண்ணப்பம் கிடைத்ததும் இந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணி புரியம் ஒரு சமூக நல ஊழியரை உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும். அவர் உங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்துப் பேசுவார். நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளும் குழந்தைக்குத் தேவைப்படும் உணர்வு பூர்வமான ஆதரவு, பொருளாதர பாதுகாப்பு இவற்றை உங்கள் குடுமபம் அளிக்க முடியமா என்பதை நேரிடையாக அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு. நீங்கள் எந்தமாதிரியான குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள விரும்பிகிறீர்கள், ஆணா, பெண்ணா என்பதையும் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். உங்கள் குடுமபத்தினரை சந்தித்த பின், சமூக நல ஊழியர் தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிக்கை (Home study Report (HSR) அளிப்பார்.

3.அந்த அறிக்கை, உங்கள் விருப்பம் இவற்றின் அடிப்படையில், ஒரு குழந்தையை அந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கும். குழந்தையின் புகைப்படம், மற்ற தகவல்கள் உங்களுக்கு அனுப்பப்படும். நீங்கள் குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தால் அந்த நிறுவனத்திற்கு வந்து குழந்தையை நேரில் பார்க்க அழைக்கப்படுவீர்கள்.

4. நீங்கள் குழந்தையை நேரில் பார்த்த பின்னர் சம்மதம் தெரிவித்தால், குழந்தையை உங்களிடம் தத்துக் கொடுப்பதற்குரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை உரிய நீதி மன்றத்தில் நிறுவனம் மேற்கொள்ளும்.

தத்தெடுக்க உதவும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியல். அயல் நாட்டில் வாழ்வோர் தொடர்பு கொள்ள வசதியாக முகவரிகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன:

1 Name and Address of the Institution : Guild of Service
32, Casa Major Road,Egmore, Chennai-600 008
TEL 28194899
In-Country & Inter-Country adoption

2 Name and Address of the Institution: Karnaprayag Trust,
No.7, Rajakrishna Rao Road,Alwarpet, Chennai-600 018.
TEL 24355182

3 Name and Address of the Institution: Institute of Fransiscan Missionaries of Mary Society,
No.3, Holy Apostle Convent,St.Thomas Mount, Chennai-600 016.
TEL 22345526

4 Name and Address of the Institution : Concord House of Jesus,
C-23, Anna Nagar East,Chennai-600 102.
TEL 26202498

5 Name and Address of the Institution: race Kennett Foundation,
No.34, Kennet Road,Madurai-625 010.
TEL 22601767

6 Name and Address of the Institution :Families for Children,
107 Vallalar Road, Podanur,Coimbatore-641 023.
TEL 22874235

7 Name and Address of the Institution : Congregation of the Sisters of the Cross of Chavanod, (SOCSEAD)
P.B.No.395, Old Goods Shed Road,Theppakulam, Trichy-2
TEL 22700923

8 Name and Address of the Institution : Christ Faith Home for Children,
3/91, Mettu Colony, Manapakkam, Chennai-600 116.
TEL 22520588

9 Name and Address of the Institution : PEACE (Poor Economy and Children Educational Society),
No.70, 3rd Street, Sivaji Colony, Edayarpalayam Post,Coimbatore-25.
TEL 22405237

10 Name and Address of the Institution: Bala Mandir Kamaraj Trust,
126, G.N.Chetty Road, T.Nagar,Chennai-600 017.
TEL 28267921
In-Country adoption
11 Name and Address of the Institution : St.Joseph’s Charity Institute,
Adaikalapuram, Tuticorin District.
TEL 2245248

12
Name and Address of the Institution : Missionaries of Charity,
Nirmala Shishu Bhavan,79, West Madha Church Road, Royapuram, Chennai-600 013.
TEL 25956928

13 Name and Address of the Institution : Anantha Ashramam,
Thenkanikottai Road,H.C.F.Post, Mathigiri, Hosur-635 110.Dharmapuri
TEL 2262324

14 Name and Address of the Institution: Kasturiba Hospital,
Gandhigram-624 302.Dindigul District.
TEL 2452328

15 Name and Address of the Institution: Claretian Mercy Home,
Azahagusirai,Ponnamangalam Post, Thirumangalam,Madurai District.
2441646

16 Name and Address of the Institution: Avvai Village Welfare Society,
Kilvellore, Nagapattinam District.
TEL 275559

17 Name and Address of the Institution: Tirunelveli Social Service Society,
Palayamkottai, Tirunelveli District
TEL 2578282

18 Name and Address of the Institution : Life Line Trust,
8-E, Raghuram Colony, Salem
TEL 2317147

19 Name and Address of the Institution: Kalaiselvi Karunalaya Social Welfare Society,
3/PP1, Mogappair West,Chennai-600 058.
TEL 26257779

20 Name and Address of the Institution : Madras Social Service Guild ,
3/75, Nedugundram, Vandalur,Chennai-600 098.
TEL 22378301

21 Name and Address of the Institution : Women’s Organisation for Rural Development,
Post Box No.1, Pandamangalam Post, P.Velur Taluk, Namakkal District.Adoption Unit @No.32A, North Street, Pothanur, P.Velur Taluk, Namakkal District.
230960

aanthai

Recent Posts

குரங்கு அம்மைக்கு புதிய பெயர் =எம்.பாக்ஸ் – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!

குரங்கு அம்மை, விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகை வைரஸ் தொற்று ஆகும். இது முதன் முதலில் காங்கோ நாட்டில்…

6 hours ago

’பாம்பாட்டம்’ -டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’, ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி…

6 hours ago

ரஜினி நடித்த ’பாபா’ படம் மீண்டும் வெளியாகுங்கோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள *பாபா* படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு…

1 day ago

இறந்தவர்களின் அஸ்தியை தபால் மூலம் புனித கங்கையில் கரைப்பது எப்படி?

உறவினர் ஒருவரின் மறைவிற்கு பின்பு அவரின் அஸ்தியை கங்கையில் கரைக்க எல்லோராலும் நேரில் பொருளாதார, மற்றும் சில காரணங்களால நேரில்…

1 day ago

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்!

மத்திய புள்ளி விவரங்கள் துறை நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

1 day ago

பவுடர் – விமர்சனம்!

சினிமா ஃபீல்டில் இருந்தே ஒதுங்கிய சாருஹாசன் என்ற நடிகரை மறுபடியும் அழைத்து வந்து தாதா 87 படமெடுத்து அதையும் கம்ர்ஷியல்…

2 days ago

This website uses cookies.