March 21, 2023

வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்களே அதிகம் – ஐ.நா ஆய்வறிக்கை!

முன்னொரு சமயம் டோனி ஜோசஃப் (Tony Joseph) என்ற ஜர்னலிஸ்ட் சொன்னது போல் இந்திய வரலாற்றின் மிகவும் நெருடலானதும் சர்ச்சைக்குரியதுமான ஒரு கேள்விக்கான விடை நிதானமாக அதே சமயம் மிக உறுதியாகக் கிடைத்து வருகிறது. தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக்கொண்ட ஒரு மக்கள் கூட்டம் சமஸ்கிருதம் என்ற மொழியுடனும் தனி வகைப்பட்ட கலாச்சாரத்துடனும் கி.மு 2000 க்கும் கி.மு 1500 -க்கும் இடைப்பட்ட காலத்தில் (அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியாவிற்குள் குடியேறினார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. அந்த காலகட்டம்தான் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது. “ஆம் அவர்கள் குடியேறிகள் தான்” என்ற ஆணித்தரமான ஐயத்துக்கிடமற்ற பதிலை உலகம் முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய ஆதாரங்கள் அலை அலை யாக வந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லி இருந்த நிலையில் சர்வதே அளவில் வெளிநாடு களுக்கு புலம்பெயர்ந்து வாழ்வோரில் இந்தியர்களே அதிகம் என்பது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஐநா சபையின் பொருளியல், சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆண்டு உலக அளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 2 லட்சம் பேர் தெரியவந்துள்ளது. இதில் 1 கோடியே 75 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. மெக்சிகோவிலிருந்து 1 கோடியே 18 லட்சம் மக்களும், சீனாவிலிருந்து 1 கோடியே 7 லட்சம் பேரும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

இதேபோன்று ரஷ்யாவிலிருந்து 1 கோடியே 5 லட்சம் பேர் பிற நாடுகளில் குடியேறியுள்ளனர். சிரியாவிலிருந்து 82 லட்சம் மக்களும், வங்காளதேசத்திலிருந்து 78 லட்சம் மக்களும், வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். மேலும் பாகிஸ்தானிலிருந்து 63 லட்சம் பேரும் உக்ரைனி லிருந்து 59 லட்சம் பேரும் அவரவர் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸிலிருந்து 54 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தானிலிருந்து 51 லட்சம் பேரும் வேறுநாடு களுக்கு புலம்பெயந்துள்ளனர். இதேபோன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 51 லட்சம் பேருக்கு இந்தியா இடமளித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.