October 19, 2021

சர்வதேச சட்ட கமிஷன் உறுப்பினரானார் இந்திய வக்கீல் – ஐ.நா. சபை தேர்தலில் தேர்வு

நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தலைமையகம் உள்ளது. அதன் பொதுச்சபையில் சர்வதேச சட்ட கமிஷனுக்கான 34 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியது. உறுப்பினர்கள், ரகசிய வாக்கெடுப்பில் பங்கெடுத்து ஓட்டு போட்டனர்.

un nov 5

இதில் இந்தியாவை சேர்ந்த இளம் வக்கீல் அனிருத்தா ராஜ்புத் (வயது 33) அமோக வெற்றி பெற்றார். இவர் பெற்ற ஓட்டுகள் 160. இவர் ஆசிய, பசிபிக் பிராந்தியத்தில் அதிக ஓட்டுகள் பெற்று, சாதனை படைத்திருக்கிறார்.

இதன்மூலம் சர்வதேச சட்ட கமிஷனின் 34 உறுப்பினர்களில் அனிருத்தா ராஜ்புத்தும் ஒரு உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார்.

இந்தியா முதன்முதலாக இந்த முறைதான் சர்வதேச சட்ட கமிஷன் உறுப்பினர் தேர்தலில் தனது வேட்பாளரை களம் இறக்கியது என இந்தியாவுக்கான ஐ.நா. நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

அனிருத்தா ராஜ்புத், இந்திய சுப்ரீம் கோர்ட்டின் வக்கீல் ஆவார். இவர் பல புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதி உள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜனவரி 2017 முதல் 5 ஆண்டு காலம் அனிருத்தா ராஜ்புத்தும், மற்றவர்களும் சர்வதேச சட்ட கமிஷன் உறுப்பினர்களாக பதவி வகிப்பர். இவர்களது அலுவலகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இயங்கும்.