Exclusive

சிறுவர் & சிறுமியர்களுக்கு ‘கோர்பிவாக்ஸ்’ தடுப்பூசி போடும் பணி துவங்கியது!

ம் நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று காலை தொடங்கியது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி நாட்டில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட தொடங்கியது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.

2021, அக்டோபர் 21ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை எட்டப்பட்டது. 2022 ஜனவரி 7ம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. ஜூன் 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவினருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வயதுப் பிரிவில் மொத்த 7.4 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் இரு தவணை தடுப்பூசியையும் முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம்180.40கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, அறிவியல் துறை நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு போடப்படும் கோர்பிவாக்ஸ் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயலாஜிக்கல் இவான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

2008, 2009, 2010ம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

aanthai

Recent Posts

கொடைபட இசை வெளியீட்டு விழாத்துளிகள்!

எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக…

12 hours ago

திருச்சிற்றம்பலம் பட விமர்சனம்!

சினிமாவில் பேமிலி படம் என்றால் சில ஃபார்முலா வைத்திருக்கிறார்கள். அம்மா. அப்பா, பங்காளி, பகையாளி, உறவாளி என்று பெருங்கூட்டத்தை இணைத்து…

14 hours ago

ஜீவி 2 – பட விமர்சனம்!

ஜீவி படத்துக்கு நம்ம ஆந்தை ரிப்போர்ட்டரில் எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி…

16 hours ago

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன்( 77) காலமானார்!

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன்( 77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு…

17 hours ago

“வரி, வட்டி, இலவச திட்டங்கள்” – டிரெண்டிங் ஆன பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

“இலவச திட்டங்கள் கூடாது என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?… எந்த அடிப்படையில் இந்த…

18 hours ago

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தமிழகத்து மரபு தானியங்களின் தொகுப்புகள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (17-8-2022) புதுடில்லியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர…

1 day ago

This website uses cookies.