January 20, 2022

விவசாயம் என்ற பெயரில் மனிதன் இயற்கையை என்னவென்ன செய்கிறான் தெரியுமா?

விவசாயம் வேறு – இயற்கை என்பது வேறு. இரண்டையும் குழப்பும் சமூகத்திற்கு என் இந்தப் பதிவு சமர்ப்பணம்: விவசாயம் – விவசாயி என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்பும் மாணவர்கள் இளையவர்கள் கவனத்திற்காக இந்தப் பதிவை வெளியிடுகிறேன். தவிர நான் விவசாயத்திற்கு எதிரானவனோ விவசாயிகளுக்கு எதிரானவனோ அல்ல. ஆனால் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முறைபடுத்த விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், பிரிவினைவாதிகள். எனவே விவசாயத்தின் இன்னொரு உண்மை முகத்தை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துவதே இந்த பதிவின் நோக்கம்.

01)விவசாயம் செய்கிறேன் பேர்வழி என்று மழைக்காடுகள் அழிக்கப்பட்டது உண்மை:

பூமியின் மொத்த நிலப்பரப்பில் பெரும் பகுதி இயற்கையை அழித்தது விவசாயம் செய்ய போகிறேன் என்று மனிதன் கிளம்பிய கடந்த 1000ஆண்டுகளில் தான். இன்று எதை எல்லாம் விவசாயம் பூமி என்று நீங்கள் பேசுகிறீர்கள் அது எல்லாம் ஒரு காலத்தில் நல்ல காடுகள். அந்தக் காடுகளை அழித்துத் தான் விவசாயம் பூமிகளை மனிதன் உருவாக்கினான். முக்கியமாக நதிக்கரை களில் அமைந்த அனைத்துக் காடுகளையும் பெரும்பாலும் அழித்து விவசாய நிலங்களாக மாற்றினான். மிக சமீபத்திய காலம் வரை அது உண்மை.

சமீபகாலம் வரை காடுகளை அழிக்கிறார்களா? என்று நீங்கள் ஆச்சரியப்படத் தேவை இல்லை. ஆம் உண்மை. தென் அமெரிக்க நாடுகளில் – இந்த உண்மையை உணர நாம் global forest watch கொடுக்கும் ஆய்வு தகவல்களை பார்க்கவேண்டும் – அதன்படி 1970களுக்கு பின் கடந்த 40வருடங்களில் சுமார் 750,000 Square kilometers அமேசான் காடுகளை அழித்து இன்று அந்த இடம் முழுவதும் செழிப்பான விவசாயம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 3,420 Square meters. அப்படி என்றால் எத்தனை ஆயிரம் சென்னை அளவு காடுகள் அழிக்கப்பட்டு அங்கே இன்று விவசா யம் நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறதா??? தோராயமாக அமேசான் மழைகாடு களின் சுமார் 18,53,29,036 Acres பரப்பளவு உள்ள காடுகள் விவசாயம் செய்ய போகிறோம் என்று அழிக்கப் பட்டுள்ளது. அங்கே இன்று விவசாயம் நடக்கிறது. பிரேசில் , பெரு,கொலம்பியா , வெனி சுலா , கயானா என்று தென் அமெரிக்க நாடுகள் என்னவோ விவசாயத்தைக் காப்பாற்றுவதாக வும் , விவசாயத்தை விரிவுபடுத்துவதாகவும் நினைத்துக் கொண்டு இந்த மழை காடுகளை அழித்து நாசம் செய்துவிட்டு மழைவளம் குறைவதற்கு முக்கிய வேலையைச் செய்து முடித்தனர். தெளி வாகக் கூறினால் 60-70% காடுகள் அழித்து அந்த இடத்தை மாடுகள் ஆடுகள் பண்ணைகள் உருவாக் கியுள்ளனர் ; 25-35% காடுகள் அழித்து அங்கே முழு நேரம் விவசாயம் செய்கிறார்கள்; மீதி இடங் களில் வீடுகள் , சுரங்கங்கள் இருக்கின்றன. நம்ம ஊர் போராளிகள் போல அங்கே இருக்கும் போலி இயற்கை ஆர்வலர்கள் எல்லாரும் அந்த 2% காரணமான சுரங்கங்கள் தான் அதன் உரிமையாளர்கள் தான் மழை வளம் குறைவுக்கு காரணம் என்று போராட்டம் நடத்த மக்களைத் தூண்டினார்கள். இது எப்படி இருக்கு????

தெற்காசிய பிராந்தியத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் பாமாயில் விவசாயம் என்ற பெயரில் காடுகள் அழுக்கும் வேலையை முக்கியமாக தெற்காசிய முழுவதும் நடந்தது. மலேசியா , இந்தோனேசியா இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு மழைகாடுகளை அழித்து பாமாயில் மரங்கள் வைத்து தோப்பு கள் உருவாக்கினார்கள் . {ஒருவேலை இங்கே உலகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் தேவை இது போல் அதிகம் ஆகி இருக்கும் என்றால் நாம் காடுகளை அழித்து தென்னை மரங்கள் நட்டு இருப்போம். இன்று இங்கே இருக்கும் தென்னம் தோப்புகள் போல் தான் பாமாயில் தோப்புகள். இந்த இரண்டு நாட்டு பாமாயில் விவசாயத்தால் அழிக்கப்பட்ட காடுகள் அளவு சுமார் 2,22,39,484 ஏக்கர். மனசாட்சி தொட்டு கூறுங்கள் யார் பூமியில் இந்த அளவிற்குக் கொடூரமாக காடுகளை அழித்தது?????

Mighty Earth அமைப்பின் ஆய்வு தகவல்படி உலகத்தில் ஒட்டுமொத்த கோகோ சாகுபடி உற்பத்தி யில் ஆப்பிரிக்கா பிராந்தியம் ஐவர் கோஸ்ட் மட்டும் 40% கோகோ உலகத்தின் தேவைக்கு ஏற்றுமதி செய்கிறது. இதற்கு அது கொடுத்துள்ள விலை??? கொஞ்சம் நஞ்சம் அல்ல – Etelle Higonnet வெளியிட்ட Chocolate’s Dark Secret ஆய்வு தகவல் வரை கூறும் உண்மை இது தான் single origin dark chocolate அதாவது மிகத் தரமான சாக்கலேட் செய்வதற்குத் தேவையான கோகோ பிசினஸ் என்று உச்சத்தை எட்டியதோ அதற்காக சுமார் 3,44,79,332 ஏக்கர் நிலப்பரப்பில் 80% அழித்து இன்று அங்கே கோகோ மரங்கள் விவசாயிகள் விவசாயம் செய்கிறார்கள். அதாவது யானைகள் , சிம்பன்சி குரங்கு கள் நீர் யானைகள் பெரும் முதலைகள் என்று பல 1000 உயிர்கள் வாழ்விடம் இன்று விவசாயி களால் அழிக்கப்பட்டுள்ளது. எவனாது இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தால் அவர்களைத் தூக்கில் ஏற்றினாலும் தகும். இது போல் பெரு ஈக்குவேட்டர் என்று பல நாடுகளில் விவசாயிகள் ஆடி இப்போது தான் கொஞ்சம் புரிந்து கொண்டுள்ளார்கள்.

இன்னும் ஒவ்வொரு நாடுகளிலும் விவசாயம் என்ற பெயரில் மனிதன் இயற்கையை என்ன என்ன செய்கிறான் என்ற தகவலை என்னால் முழுமையாகத் தரமுடியும். கொஞ்சம் யோசிக்கவும் இது எந்த வகையில் ஆபத்தானது ???

01)ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு நீங்கள் வண்டி ஓட்டினால் சுமார் 2.3 kg கார்பன்டை ஆக்சைடு வெளிவரும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் ஆண்டுக்கு சுமார் 2.6 tons கார்பன்டை ஆக்சைடை சுத்திகரிப்பு செய்யும். ஆனால் அந்த காடுகளி அழித்து ஒரு ஏக்கர் நிலத்தில் நீங்கள் நெல் , கோதுமை பயிரிடுவதால் என்ன ஆகும்??? உங்களுக்கு உணவு கிடைக்கும். ஆனால் கார்பன் சுத்திகரிப்பு????

02)அடுத்து மழைக்காடுகள் என்று ஏன் கூறுகிறோம் என்றால் அந்தக் காடுகளில் உள்ள மரங்கள் தொடர்ந்து நீர் மூலக்கூறுகளை நீராவியாக்கல் மூலம் வெளியேற்றும் அதன் காரணமாக மேகங்கள் மிக எளிதாக மழைக்காடுகள் அதன் சுற்றுப்புறங்களில் வெகுவாக உருவாவதும் , கவர்ந்திழுக்கப்படும் நடக்கும். இது நேரடியாக மழை வளத்தைக் கொடுக்கும். மலைக்காடுகள் கொண்ட மரங்களை நீங்கள் அகற்றிவிட்டு அங்கே விவசாயம் செய்தால் மேகங்கள் எப்படி உருவாகும் ? உருவாக மேகங்கள் எப்படி கவர்ந்திழுக்கப்படும்??? மழைவளம் குறைய காரணம் மழைகாடுகள் அழிப்பது தான்.

பிரச்சனை புரிகிறதா ??? ஆக விவசாயம் செய்வதை ஒருபக்கம் முக்கியம் என்றால் – அதை விட அதிக முக்கியம் மழைக்காடுகள் பாதுகாப்பு. கடந்த 70வருடத்தில் மட்டும் அமேசன் காடுகளில் ஏற்பட்ட பாதிப்பு மட்டும் 18,53,29,036 Acres பரப்பளவு என்றால். உலகம் முழுவதும் எத்தனைக் கோடி ஏக்கர் நிலத்தை நாம் விவசாயம் செய்கிறோம் என்று அழித்தோம் ????? கொடுமை என்னவென்றால் இயற்கை விவசாயம் என்று பேசும் நபர்கள் கூட உரங்கள் , அது இது என்று கூறுகிறார்களே தவிர இயற்கையை அழித்து விவசாய பூமிகளை உருவாக்கிய வரலாற்றைப் பெற மறுக்கிறார்கள்.

சரி உலகத்தை விடுங்கள் நம்ம ஊர் விவசாயிகளைப் பற்றி பேசுவோம்…. இப்படி உலகத்தில் விவசாயம் என்ற துறைமூலம் நடக்கும் நாசங்களை அந்த அந்த நாடுகளில் கேள்வி எழுப்பி விவாதம் ஆக்கி அவர்களைக் கண்டித்து சரியான மாற்றத்தை கொண்டுவர முயற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் மட்டும் விவசாயம் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற கெட்ட பழக்கம் இருக்கும் என்றால் அது இந்தியா தான். விவசாயம் என்ற போர்வையில் 10லட்சத்திற்கு டிராக்டர் வாங்கியவன் எந்தக் காசும் திருப்பிக் கட்டாமல் – 40% தள்ளுபடி மானியம் கொடுத்தும் கட்டாமல் முழுமையாக அரசைத் தள்ளுபடி பண்ணுங்கள் நான் விவசாயி என்று மிரட்டலாகக் கூற முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆக இனி நம் நாட்டில் விவசாயிகளால் நடக்கும் தவறுகள் காண்போம்.

02)விவசாயம் என்ற பெயரில் நிலத்தடி நீர் கொள்ளை:

நீர் என்பது ஆக அவசியமான ஒன்று. அதன் ஒவ்வொரு துளியையும் சரியாகப் பயன்படுத்த நாம் சிந்திக்க வேண்டும். ஆனால் என்ன இங்கே நடக்கிறது என்றால் கொக்கோ கோலா நிறுவனமா தண்ணீர் எடுக்கிறது என்று அவர்களைக் குற்றம்சாட்டும் நம் இணையப் போராளிகள் அந்த கொக்கோ கோலா நிறுவனம் தண்ணீரை எடுத்து ஒன்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வில்லை. அந்த அந்த மாநிலங்களில் சர்பிலஸ் தண்ணீரை எடுத்து அந்த மாநில மக்களுக்குத் தான் விற்கிறது.

ஆனால் விவசாயம்?

அரபிய நாடுகளுக்கு மட்டும் நாம் ஆண்டுக்கு 9,97,22,300 கிலோ கோதுமை ஏற்றுமதி செய்கிறோம். ஒரு கிலோ கோதுமை உற்பத்தி செய்ய சராசரியாக 410 முதல் 945 லிட்டர் தண்ணீர் தேவை. அப்படி என்றால் சவுதி அரபியாவிற்கு மட்டும் 49,86,10,00,000 லிட்டர் தண்ணீரை மறைமுகமாக ஏற்றுமதி செய்கிறோம். 124.6 மில்லியன் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அப்போ எவ்வளவு நீர் ஏற்றுமதி செய்கிறோம்? அட நீங்களே கணக்கு போடுங்கள்.மிக எளிமையாக உங்களுக்குப் புரியும் படி கூறினால் 1,76,600குடும்பங்களின் ஆயுள் முழுவதும் தேவையான தண்ணீரைத் தான் ஒரே ஆண்டில் சவுதி அரேபியா என்ற நாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்கிறோம்???? காரணம் மறைமுகமாக இந்த விவசாயம் தானே!!! அப்போ மற்ற தானியங்கள் பலன்கள் காய்கறிகள் எல்லாம் சேர்த்தல் ???? மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் அளவைச் சேர்த்தால் ???? உண்மையில் இந்த நாட்டில் இருந்து தண்ணீர் ஏற்றுமதி செய்வது விவசாயிகள் தானே தவிர வேறு எந்த பெரும் நிறுவனமும் அல்ல.

Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)

2016-17 ஆண்டின் புள்ளிவிவரபம் கொடுக்கும் தகவல் படி :

பாஸ்மதி அரிசி = 405,67,58,620 கிலோ (1 கிலோ பாஸ்மதி அரசி விளைச்சலுக்கு 2000-5000லிட்டர் தண்ணீர் தேவை)

பிற அரிசிகள் = 864,84,88,580 கிலோ (1 கிலோ பிற அரசி விளைச்சலுக்கு 2000-4000லிட்டர் தண்ணீர் தேவை)

வெங்காயம் = 158,89,85,000லட்சம் கிலோ (1 கிலோ வெங்காயம் விளைச்சலுக்கு 159-200லிட்டர் தண்ணீர் தேவை)

இப்படி எடுத்து நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள் இந்த நாட்டில் இருந்து யார் தண்ணீரை ஏற்றுமதி செய்கிறார்கள் – யாரால் தண்ணீர் கொடூரமாக கண்மூடிதமாக பயன்படுத்தப்படுகிறது என்று புரியும். நாம் ஏற்றுமதி செய்யும் முக்கிய விவசாய பொருட்கள் 1.பாஷ்மதி அரிசி 2.இதர அரிசிகள் 3.காய் கறிகள் 4.பழங்கள் 5.பழங்கள் மூலம் கிடைக்கும் ஜூஸ் போன்றவை 6.கடலை 7.தேங்காய் இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். இவை அனைத்திற்கும் நீர் தேவை இருக்கிறது. அந்த நீர் ஆதாரம் எது ??? மழை பொழிந்து அந்த நீரில் விவசாயம் என்றால் சரி , ஆறுகளில் கிடைக்கும் தண்ணீர் கொண்டு விவசாயம் என்றால் சரி – ஆனால் நிலத்தடி நீரை எடுத்து விவசாயம் செய்து ஏற்றுமதி என்பது எவ்வளவு பெரிய தவறு???? அனைத்துக் கிணறுகளையும் இன்று நீர் இல்லாமலேயே போய் கொண்டிருக்கிறது. பின் அடுத்த தலைமுறைக்கு????

இந்த நிலத்தடி நீர் சிக்கலை உணராது போனால் உங்கள் அனைவருக்கும் எமனாக நிற்கப் போவது இதே விவசாயம் தான் நான் இதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் ? உலகம் முழுவதும் எங்கெல்லாம் விவசாயிகள் நிலத்தடி நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்தனரோ அங்கே எல்லாம் இன்று பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடுகள் உருவாகிவருகிறது. காரணம்????? நிலத்தடி நீர் என்பது மீண்டும் அதன் மட்டத்தை அடைவதற்கும் எந்த அளவிற்கு ஆதாரம் இருக்கோ அந்த மட்டத்தில் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது??

எடுத்துக்காட்டுக்கு :

நிலதடி நீர் எவ்வளவு ஆழத்தில் கிடைக்கும் என்ற கணக்கு வேண்டும் Depth to Water Level. அத்தோடு மழைக்காலத்திற்கு முன் மழைக்காலத்திற்குப் பின் அந்த அளவு எவ்வளவு என்ற கண்காணிப்பு வேண்டும். இதைச் செய்வது CGWB(Central Ground Water Board, Ministry of Water Resources). அதன் படி தமிழ் நாட்டில் மதுரை மாவட்டத்தில் 14 பிளாக் இருக்கிறது. அதில் வது பிளாக் திருமங்கலம் என்ற பகுதி(திருமங்கலம் பார்முலா ஞாபகம் உள்ளதா அந்தப் பகுதி தான்).

இந்த திருமங்கலத்தை நீர்வளத்துறை தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை(longitude and latitude) வைத்து 24 பகுதிகளாகப் பிரித்துள்ளது. எந்த இடத்தில் எவ்வளவு நிலத்தடி நீர் உள்ளது என்பதை மழைக்காலத்திற்கு முன் பின் என்று தெளிவாக எடுக்கிறார்கள். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மீண்டும் கூடவில்லை என்றால் அந்தப் பகுதிகளில் எச்சரிக்கையாக அரசு செயல்பட வேண்டும். இது நிர்வாக விவரம். ஆனால் இந்த நிலத்தடி நீர் வரத்து இருபதை விட எடுத்து அதைப் பயன் படுத்தும் அளவு அதிகமாக இருக்கிறது. இதை அதிகம் செய்வது விவசாயிகள் தான் – 1996களுக்கு பின் இது வேகமாக வளர்ந்து இன்று தண்ணீர் வறட்சி மெல்ல உருவாகி வருகிறது.

இந்த இடத்தில் நன்கு புரிந்து கொள்ளுங்கள் :

நாட்டின் மொத்த தண்ணீரில் 85.3% தண்ணீர் யார் பயன்படுத்துகிறார் தெரியுமா – விவசாயிகள் தான். வீடுகளில் குளிக்க குடிக்க ஆரம்பித்து பெரும் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்தால் 15 முதல் 18% அளவில் தான் தண்ணீர் பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் தான் நாட்டின் 85% அளவிற்கான தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். (உலகத்தின் 97% தண்ணீர் கடல்களில் இருக்க – 2.5% அளவிற்கு நிலத்தடி நீர்தான் உள்ளது.}. அதில் பாதிக்கும் மேல் நிலத்தடி நீர். ஆக நிலத்தடி நீரை எடுத்து விவயசம் செய்து பல லட்சம் டன் அரிசி காய்கறி பழம் என்று ஏற்றுமதி மூலம் தண்ணீரை அதுவும் நிலத்தடி நீரை ஏற்றுமதி செய்யும் செய்வது எந்தத் துறை?????? இதே விவசாயம் தான்.

இதை ஒழுங்கபடுத்தவில்லை என்றால் – அதுவும் நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த வில்லை என்றால் நாளை தண்ணீருக்கு அலைந்த இந்த மக்கள் கொடூரமான ஒரு உலகத்தைச் சந்திப்பர். அதாவது தண்ணீர் முடிவுக்கு வந்துவிட்டது என்றால் ஆப்ரிக்காவை விட மோசமான வறுமையைச் சந்திப்பீர். எனவே இருப்பதைக் காப்பாற்றி கொள்ள 85% தண்ணீரைப் பயன்படுத்தும் இந்த விவசாயத்தை முறைப்படுத்துவது என்ன தவறு இருக்கிறது. நிலத்தடி நீரை முறுபடுத்த ன நரேந்திர மோடி அவர்கள் ஆலோசனை வழன்கியுள்ளர் அதற்கான திட்டமும் தயார். ஆனால் இங்கே அதை நக்சல் ஆதரவாளர்கள் இப்போதே னி நிலத்தடி நீருக்கும் அரசு கட்டுப்பாடு கொண்டு வந்து விவசாயிகளை அடிமையாக்கப் பார்க்கிறது என்று குழப்பும் வேலையை ஆரம்பித்து விட்டனர். திருமுருகன் போன்றவர்கள் களத்தில் இதைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

இதை என்ன சொல்லி இப்போ புரியவைப்பது மக்களிடம்????? படித்தவனே புரிந்து கொள்ள மாட்டான் – இதில் படிக்காத மக்கள் ?????

03)விவசாய கடன் தள்ளுபடி என்னும் தற்கொலை முடிவு:

sowing (விதைப்பதற்கு) , transplanting(நாத்து நடவு), weeding(களையெடுத்தல்), fertilizer application (உரம் , பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு ), irrigation(தண்ணி பாசனம் செய்வது) ,harvesting(அறுவடை) என்ற அனைத்து விவசாய வேலைக்கும் காலம் காலமாக வேலை செய்தவர்கள் விவசாய கூலிகள் இவர்கள். இவர்களிடம் பெரும்பாலும் நிலம் கிடையாது. அடுத்தவரது நிலத்திற்குக் கூலி வேலை செய்து கொடுப்பவர்கள். தின கூலி , மொத்தமாக வாங்கிய கடனுக்கு கூலி என்று பலர் உண்டு. இவர் எந்தக் காலத்திலும் வங்கியில் கடன் வாங்கியவர் கிடையாது. கடன் வாங்கினால் நம்ம வட்டிக்கு விடும் நபர்களிடம் தான் வாங்கவேண்டும். வசதி இல்லாதவனுக்கு எதை நம்பி கடன் கொடுப்பான்?  அதிகபட்சம் தவணையாக 1000ரூபாய் 2000ரூபாய் வாங்கும் ஏழைகள் இவர்கள். இவர்கள் தான் 60% மேல் விவசாயத்தில் இருப்பவர்கள். இவர்களுக்குக் கடன் தள்ளுபடியால் என்றுமே எந்த பலனுமே கிடைத்தது இல்லை.

இரண்டாவது 4,5 ஏக்கர் வைத்துள்ள நடுத்தர விவசாயி.பொதுவாகக் குடும்பமாக தங்கள் நிலத்தில் வேலை செய்பவர்கள் இவர்கள். இவர் அதிகபட்சம் 15000 , 20000ரூபாய் வாங்கும் நடுத்தர விவ சாயி. அதுவும் அவசர தேவைக்கு மட்டுமே என்பதால் அதிகம் வங்கிகள் பக்கம் வருவதை விடத் தெரிந்தவர்கள் , கமிசன் மண்டி போன்றவற்றில் வாங்கி விட்டுத் திரும்ப கொடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இவர்களில் மிகக் குறைவான வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்குவது உண்டு.

மூன்றாவதாக வருவது நம்ம நாட்டாமைகள்.50 ஏக்கர், 200 ஏக்கர் என்று இவர்கள் பெரும் விவசாயி கள் தான் அதிகம். இந்த டிராக்டர் வாங்குவது முதல் அனைத்து வகையிலும் வங்கியைப் பயன் படுத்தும் கூட்டம் இது. 5லட்சம் 10லட்சம் எல்லாம் இவர்கள் தான் வாங்குவது. ஆக அனைவருக் கும் கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறுவது நியாயமே இல்லாத கோரிக்கை.. இது முதலில் புரிகிறதா?

2008-09 மொத்தம் ₹60,000 கோடி மத்திய அரசு தள்ளுபடி செய்தது… எப்படி மீண்டும் வெறும் 8 வருடத்தில் இவ்வளவு பெரிய கடன் உருவாகிவிட்டது???? இப்போ 2010ல் இருந்து வாங்கிய வங்கிக் கடனை எல்லாம் தள்ளுபடி செய்யக் கூறி மீண்டும் விவசாயிகள் போர்வையில் போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார்கள். இன்று தள்ளுபடி கொடுத்தால் 2010முதல் 2030 வரை கடன் வாங்கி அதைத் தள்ளுபடி செய்ய கூறி 2030ல் போராட்டம் நடத்துவர். ஆகக் கடன் வாங்குவோம் அதைக் கட்டாமல் அடுத்த பத்தாண்டுகளில் போராட்டம் நடத்தி தள்ளுபடி செய்யக் கூறுவோம் ????? இது எப்படி இருக்கு. அனைவரும் நஷ்டம் ஆகிவிட்டனர் ???? 50 ஏக்கரில் 10லட்சம் 20 லட்சம் டிராக்டர் வாங்கி அதையும் கட்டமாட்டேன் தள்ளுபடி செய்யுங்கள் என்று வந்து நிற்பது எல்லாம் அயோக்கியத்தனம்.

அப்படி என்றால் நம்ம கொஞ்சம் புள்ளி விவரம் பார்க்க வேண்டும்:

Ministry of Agriculture & Farmers Welfare
Department of Agriculture, Cooperation & Farmers Welfare
Directorate of Economics and Statistics

இவர்கள் கொடுக்கும் தகவல்படி என்ன நமக்குப் புரிகிறது என்றால் 2010 முதல் 2016வரை எப்படி யான நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.

2010-11 ஆண்டு புள்ளிவிவரப்படி :

அரசி 96.0 Million Tonnes
கோதுமை 86.9Million Tonnes
பருத்தி 330.0Million Tonnes
மற்ற தானியங்கள் 43.4Million Tonne
மொத்த தானியங்கள் உற்பத்தி என்றால் 226.3 Million Tonnes

பால் உற்பத்தி : 116.4Million Tonnes
முட்டை : 60267(Million Nos.)
மீன் : 7998(000’ Tonnes)

2015-16 ஆண்டு புள்ளிவிவரப்படி :

அரசி 104.8 Million Tonnes
கோதுமை 88.9Million Tonnes
பருத்தி 354.8Million Tonnes
மற்ற தானியங்கள் 41.8Million Tonne
மொத்த தானியங்கள் உற்பத்தி என்றால் 235.5 Million Tonnes

பால் உற்பத்தி : 137.7Million Tonnes
முட்டை : 74752(Million Nos.)
மீன் : 9574(000’ Tonnes)

பெரிய வளர்ச்சி இல்லை. விவசாயம் 5%கீழ் தான் இருக்கிறது(4.1%வளர்ச்சி). ஆனால் பெரிய வீழ்ச்சி நிச்சயம் கிடையாது. இது புரிகிறது தானே? {தொடர் விவசாய வேலை ஆட்கள் குறைவு , வேலை ஆட்கள் பணி கூலி அதிகம் போன்ற காரணங்களும் விவசாயம் பலர் விட்டுவிட.} ஆக நமக்கு ஒன்று புரிகிறது. விவசாயம் செய்பவர்களில் ஒருசாரார் தற்கொலை செய்யும் நிலையில் இருக்க இனொரு பக்கம் நல்ல விவசாயம் நடக்கிறது. ஆக அனைவருக்கும் விவசாய கடன் தள்ளுபடி என்பது முட்டாள்தனமான பேச்சு. உண்மையில் வருமையில் வாடுபவர்களுக்குக் கூட விவசாய தள்ளுபடி நிரந்தர தீர்வாகாது.

04)சிந்தனையில் என்ன மாற்றம் தேவை :

கிராமப்புற மேம்பாடு என்பது விவசாயத்தை நம்பிதான் இருக்க வேண்டும் என்று எதுவும் விதி இருக்கிறதா என்ன???? எதற்கெடுத்தாலும் கிராமம் என்றால் விவசாயம் சார்ந்து தான் பொருளா தாரம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது சரியான பார்வை இல்லை. 6000 கோடி போட்டு  நீங்கள் இலவச டீவி மிக்சி கொடுத்து அது 1 ஆண்டில் பழுதாகி குப்பையாக – அதற்குப் பதிலாக மாநிலம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாத அளவு பின்தங்கிய 1000 கிராமங்களைத் தேர்வு செய்து அந்தப் பகுதி மக்களுக்குச் சிறு குறு தொழில் செய்யும் மிசின்ஸ் கொடுத்திருந்தால் நாட்டின் உற்பத்தித் திறனை கூட்டி இறக்குமதியைக் குறைத்திருக்கலாமே!!! {கேட்டால் படிக்காத மக்கள் என்று எதாவது சொல்வது. இன்று கிராமங்களில் படித்து மாணவர்கள் வந்துவிட்டனர். அவர்களை நம்பி களத்தில் இறங்கி இருக்க வேண்டும். எதற்குச் சென்னை தேடி வந்து வேலை செய்ய வேண்டும்???? அவன் ஊரிலேயே சின்ன சின்ன உற்பத்தி செய்ய அதைக் கொள்முதல் செய்து சந்தை படுத்தச் சரியா திட்டமிடல் எதாவது நாம் செய்தோமா??? 70000கோடி கொண்டு போய் குப்பையில் வீசினோம்.

“பொருளாதார மேம்பட விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளைத் தேடலாம் தவறு இல்லை”. உடனே ஒரு கூட்டம் சோறு சோறு சோற்றுக்கு எங்கே போவேன் என்று சாப்ட்வேர் நிறுவனத்தில் நிறுவனத்தில் 80,000 சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு அடுத்தவன் கஷ்டம் புரியாமல் நாட்டின் கஷ்டமும் விழுங்காமல் – நான் பாருங்கள் விவசாயத்திற்குக் குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று எதையாது கருத்து தெரிவிப்பது. அப்படி ஆட்களுக்கு

உலக வங்கியின் தகவல்படி:

ஆஸ்திரியா : 1983ல் 9.92%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 4.53% மட்டுமே.
பிரேசில் : 1981ல் 29.25%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 10.29% மட்டுமே.
கனடா : 1963ல் 8.2%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 1.64% மட்டுமே.
பிரான்ஸ் : 1969ல் 14.28%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 2.9% மட்டுமே.
அமேரிக்கா : 1960ல் 9%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 1.61% மட்டுமே.

ஆசியாவில் :

பிலிப்பைன்ஸ் : 1971ல் 50.39%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 29.15% மட்டுமே.
சீனா : 1978ல் 70.53%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 28.3% மட்டுமே. தாய் லாந்து : 1971ல் 76.72%மக்கள் விவசாயம் சார்ந்து இருந்தனர் – இப்போ 32.28% மட்டுமே.

ஆக உலகம் முழுவதும் விவசாயம் சார்ந்து இருப்பவர்கள் குறைகிறார்கள்???? அது தவறே இல்லை. உணவு உற்பத்தி என்று பார்த்தால் எல்லா நாடுகளுமே வளர்ச்சியில் தான் உள்ளன. நல்ல புரிந்து கொள்ளுங்கள் : 1950களில் வெறும் 50million tonnes உணவு உற்பத்தி மட்டுமே செய்த நாம் – இன்று 264 million tonnes உணவு உற்பத்தி செய்கிறோம். அதே போல் தான் சீனாவும் 1950களில் வெறும் 110million tonnes உணவு உற்பத்தி என்றால் இன்று அது 500million tonnes மேல் சென்று விட்டது. அதாவது sowing (விதைப்பதற்கு) , transplanting(நாத்து நடவு), weeding(களையெடுத்தல்), fertilizer application(உரம் , பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு ), irrigation(தண்ணி பாசனம் செய்வது) ,harvesting(அறுவடை) என்று அனைத்துக் கூலி வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்து விடக் கூலி ஆட்களாக கஷ்டப்பட்ட சமூகம் படித்து வெளியேறுவது தான் நல்லது. அதனால் தான் அதிகம் விவசாயம் சார்ந்து இருப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது. இப்போது படித்து விட்டு வெளியேறும் அனைவருக்கும் சென்னை , கோவை நகரத்தில் வேலைக் கொடுத்துவிட முடியாது. அரசு வேலையும் 1% கூட கிடையாது.

இப்படி ஒரு பக்கம் இருக்க… நாட்டில் ஆட்டோ மொபைல் , எலக்ரானிக் என்று அனைத்து உதிரிப் பாகங்களும் இறக்குமதி ஆவது என்ன சரி???? உங்களுக்கு தேவையாதை உற்பத்தி செய்து கொள்ள உங்களுக்கு ஏற்பாடு இல்லை. அந்த உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் மெசின் எல்லாம் சும்ம 2 , 5 , 10 லட்சம் தான் ஆகும். அதிகப்படி போனா 20 – 30 லட்சம் ஆகும். 7000கோடி கோடி கலர் டீவி கொடுத்ததற்கு 70,000 பேருக்கு 10,000லட்சம் மதிப்பில் இப்படி உற்பத்தி small scale industries machine வாங்கிக் கொடுத்திருந்தால் அவன் அவன் அவனது பொருளாதாரத்தை முன்னேற்றி இருக்க முடியுமே??????லெதர் பேட்ஜ் , சின்ன சின்ன அலங்கார விலக்குகள் ஆரம்பித்து உங்களைச் சுற்றி பாருங்கள் குட்டி குட்டி பொருட்கள் நிறையா இருக்கு. அதில் பாதி இறக்குமதி தான் ஆகுகிறது – அதை எல்லாம் உற்பத்தி செய்ய கிராமங்களை நாடுவது தான் நலம்.

இறுதியாக :

மனிதன் முதலில் விவசாயத்தைப் பெருக்குவதை விட – உணவை வீணதிக்காமல் இருந்தாலே போதும் பூமி குளிரும். Food and Agriculture organization (FAO) கொடுக்கும் தகவல்படி மனித உணவு உற்பத்தி செய்து அதில் மூன்றில் ஒரு பங்கை வீணடிக்கிறான். ஆனால் உணவு உற்பத்தியைக் கண்மூடித்தனமாக அதிகரிக்க விரும்புகிறான். ஆண்டுக்கு இந்தியாவில் 88,800 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்களை வீணடித்துவிட்டு “விவசாயம் கூட்ட வேண்டும்” என்று வெக்கம் இல்லாமல் மீம்ஸ் போடுகிறான்??? இதில் எவ்வளவு பெரிய தவறு???? கோயம்பேடு மார்கெட் போங்க தாராளமாக ஒரு கணக்கு எடுங்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் ஒவ்வொரு நாளும் இவ்வளவு உணவு வீணாகிறதா என்று.

ஆக மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் இதுவே “விவசாயம் வேறு – இயற்கையை என்பது வேறு. விவசாயம் மனிதன் தன் உணவு தேவைக்காக உருவாக்கிக் கொண்ட துறையே அன்றி இயற்கையைக் காப்பாற்ற அல்ல. ஆறுகளின் படுக்கைகளில் இருந்த மலைக்காடுகள் பலவும் அழித்து விட்டு விவசாய நிலங்களாக மாற்றியவனும் இவனே. வேறு எந்தத் துறையை விடவும் விவசாயத்தால் தான் இயற்கை கடந்த காலங்களில் உலகம் முழுவதும் அழிவை அதிகம் சந்தித்தது என்பது எதார்த்தமான உண்மை.

SBI வங்கி இப்படி அறிவித்தது “25லட்சம் மேல் ட்ராக்டர் போன்ற விவசாய கருவிகள் வாங்கிய கடனை ஒரே தவணையான கட்ட 40% வட்டி சலுகை அறிவித்தது – ஆனால் கட்டுவதற்கு தான் மனசு இல்லை இந்த நாட்டாமைகளுக்கு. காரணம் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் மொத்தமாகக் கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அது யாருடைய காசு???? ஒரு வீடு வாங்க 2EMI ஓட்டுத் தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்கி அதைத் தக்க வைத்து கொள்ளப் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் கட்டும் வரிப்பணம் அது. தண்ணீரை ஏற்றுமதி செய்வதை விட உன் அறிவை – அதன் மூலம் உருவான தொழில் நுட்பத்தை , உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதுவே நாட்டிற்கும் எதிர்கால சந்ததிக்கும் நல்லது. கிரமாபுறங்களுக்கு மாற்று பொருளாதார சிந்தனையை சிந்திக்கும் நேரம் இது. விவசாயம் மட்டுமே கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு காரணம் என்று நினைப்பதே ஒரு வியாதி பிடித்த சிந்தனை.

நான் கண்மூடித்தனமாக விவசாயத்தை ஆதரிப்பேன் என்று நீங்கள் இருந்தால் – நிலத்தடி நீரை பாதுகாக்க நீங்கம் முயற்சி செய்யவில்லை என்றால் ஆம் ஆப்ரிக்கா நாடுகள் போல வறட்சி வந்து இந்த நாட்டில் அனைவருமே தண்ணீர் பஞ்சத்தைச் சந்திப்போம். அன்று அதற்குக் காரணம் அரசு , ஆட்சியாளர்கள் , கார்ப்பரேட் என்று யாரும் இல்லை – நாட்டின் 80% தண்ணீரைப் பயன்படுத்தும் விவசாயத்தை – அவர்கள் நிலத்தடி நீரை எடுப்பதை முறைப்படுத்தாமல் விட்டதே காரணம் என்று உணர்வீர்.

இது உண்மை இதை ஏற்பதும் ஏற்காததும் இயற்கைக்கு ஒரு விசயமே அல்ல – நீ உணராது போனால் கொடுரமான எதிர் விளைவை உன் குழந்தைகள் சந்திக்கும்.

“நிலத்தடி நீரைப் பாதுகாக்க, கண்மூடித்தனமாக பயன்படுத்துவதைத் தடை செய்ய விரிவான திட்டத்துடன் நரேந்திர மோடி அவர்கள் மேற்கொள்ள இருக்கும் முயற்சியை எடுத்த எடுப்பில் தவறாக மக்களிடம் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர் அற்பன் நக்ஸல்வாதிகள், பிரிவினை வாதிகள். வெறும் மத காரணத்தால் அந்த மனிதரை எதிர்க்கும் சில மதவெறியர்கள். மேலே இருப்பதைப் படித்தவனுக்கே சொல்லிப் புரிய வைப்பது கடினம் – இதில் மக்களுக்கு எப்படி????”.

-மாரிதாஸ்