அலுவலகத்தில் தூக்க அறை ஒன்று கட்டாயம் வேண்டும்! – சர்வே ரிசல்ட்

கஷ்டப்பட்டு உழைச்ச பிறகு சுகமான மெத்தையில் படுத்துத் தூங்குவது இதம் அளிப்பதுடன் புத்துணர்ச்சியையும்.. இதைத் தான் ஸ்டார்ட் அப் நிறுவனமான ’வேக்ஃபிட்’ (Wakefit) செய்து வருகிறது. இங்கு தன் உடலை நேசிப்போர்களின் எதிர்பார்ப்பு தொடர்பான வேக்ஃபிட் ஆய்வு மூலம் நிறைய அறிந்து கொண்டுள்ளது. உதாரணமாக, 48 சதவீதம் பேர் முதுகு வலி கொண்டிருப்பதாக கூறியதையும், 80 சதவீதம் பேர் வாரத்தில் சில நாட்கள் பணியிடத்தில் தூக்கமாக உணர்வதையும் ஆய்வு மூலம் தெரிந்து கொண்டுள்ளது. அதை அடுத்து தூங்குவதற்கு ஏற்ற படுக்கும் முறைக்கு உதவும் வகையில் ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட வேக்ஃபிட் மெத்தைகள் 2016ல் அறிமுகம் செய்யப்பட்டன. முதல் மாதத்தில் இருந்து லாபம் கண்டு வருவதாக கூறும் வேக்ஃபிட், தனது ஆண்டு வருவாயில் மூன்று மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் நிறுவனம் தூக்கத்திற்கான தீர்வை கண்டறியும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். சமீபத்தில் நடத்திய ஆய்வில் அலுவலகத்தில் தூக்க அறை என்பது ஊழியர்களின் தேவை என கூறியுள்ளது.ஆய்வில் தங்கள் அலுவலகத்தில் தூக்க அறை இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதில் 86 சதவீதத்தினர் தூக்க அறை இருந்தால் வேலையில் நல்ல முன்னேற்றம் காணமுடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு என்கிறார்கள் மருத்துவர்கள். உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். அதுவும் மதிய உணவு வேளைக்குப் பிறகு பலரும் ஒரு மயக்க நிலைக்குச் செல்வது போன்ற ஓர் உணர்வைப் பரவலாக எதிர்கொள்கிறோம். ஓய்வாக இருக்கும் வேளையில் இதுபோல் ஏற்பட்டால் தூங்கி விடலாம்தான். ஆனால், ஏதேனும் வேலை நிமித்தமாகவோ அலுவலகத்தில் இருக்கும்போதோ ஏற்பட்டால் நிலைமை தர்ம சங்கடமாகிவிடும்.

ஆனாலும் பணி நேரத்தில் சிலர் மேஜை மீது தூங்குகிறீர்கள் அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறீர்கள் இப்படி சிலர் மட்டும் தான் தூங்குவதாக நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை, பலர் பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொண்ட எடுக்கப் பட்ட ஆய்வு முடிவில்தான் தூக்க அறை இருந்தால் வேலையில் நல்ல முன்னேற்றம் காணமுடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதாவது இந்த தூக்க அறை என்பது நீண்ட நேரம் தூங்கிக் கொள்வது அல்ல. சற்று தூக்கம் வருவதுபோல் இருந்தால் சில நிமிடங்கள் தூங்கி எழுவது அல்லது ஓய்வு எடுக்கவுமே இந்த அறை.ஆனால் இந்திய நிறுவனங்களைப் பொருத்தவரை அலுவலகத்தில் தூங்குவது என்பதே அபத்தமான செயலாகப் பார்க்கட்டுகிறது எனக் கூறியுள்ளது. மேலும் இந்த சூழலை ஊக்குவிக்கும் விதமாகவும் நிறுவனங்கள் கடுமையாக செயல்படுவதாக தெரிவித்து உள்ளது. மேலும் இவ்வாறு செய்வதால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்பது நிறுவனங்களின் எண்ணமாக இருக்கிறது.

வேக்ஃபிட் ஆய்வில் முன்னரே சொன்னது போல் 41 சதவீதம் பேர் பணி ரீதியான மன அழுத்தம், சரியான கால அளவில் தூக்கமின்மை போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். 31 சதவீதத்தினர் பதட்ட நிலையில் இருக்கின்றனர். 20 சதவீதத்தினர் எல்லா நேரமும் தூங்கியபடியே இருக்கின்றனர். 51 சதவீதத்தினர் மந்தமான நிலையிலேயே சுற்றித் திரிகின்றனர் என்று கூறியுள்ளது.மேலும் அதில் 80 சதவீதம் ஊழியர்கள் அதிகபட்சமாக வாரத்தில் மூன்று நாட்கள் பணி இடையில் தூக்கத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஊழியர்கள் பணிகளுக்கு இடையே தூக்கம் வருவதுபோல் உணர்ந்தால் 20-30 நிமிடங்கள் தூங்கி எழுவது மனித உடலுக்கு நல்ல அலாரமாக இருக்கும் என ஆய்வு பரிந்துரைக்கிறது. சத்தான உணவு, உடற்பயிற்சி என ஊக்குவிப்பதை தவிர்த்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவதே ஊழியர் களின் உடல் நலத்திற்கு நல்லது என்கிறது. ஆக..கட்டாயம் அலுவலகங்கள் தூக்க அறை வைப்பது ஊழியர்களுக்கு அவசியம் என்கிறது ஆய்வு.