September 18, 2021

இந்திய கிரிகெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு!

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை செய்தனர். இந்த கூட்டத்தில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
முன்னதாக இருந்த 3 கிரேடுகள் நான்காக அதிகரிப்பட்டுள்ளது. ஏ+, ஏ, பி மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வீரர்களை தரம் பிரித்து உள்ளார். இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் இடம் பிடித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மூன்று கிரேடுகளாக தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.50 லட்சமும், ‘பி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.30 லட்சமும், ‘சி’ கிரேடில் உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சமும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம்.

ஏ பிரிவில் எம்.எஸ்.தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்கிய ரகானே, விர்திமான் சாஹா ஆகிய 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 5 கோடி ஊதியம் அளிக்கப்படும்.

பி பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்,  சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் கிடைக்கும்.

கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் சி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்ஊதியம் தரப்படும். மொகமது ஷமி இதில் எந்தப்பிரிவிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மொகமது ஷமி மீது அவர் மனைவி புகார் அளித்துள்ளதால் அவர் இந்த ஒப்பந்தப் பட்டிய்லில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.