October 18, 2021

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணிகள் ரெடி!

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்திய ராணுவத்தின் ஜூனியர் கமிஷன்டு அந்தஸ்தில் நியமிக்கப்படுவர்.  படைவீரர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மத நல்லிணக்கம் குறித்து போதிப்பது, இறுதி சடங்கில் அவரவர் மத சம்பிரதாயப்படியான சடங்குகளை நடத்துவது, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களின் மனஉறுதியை மேம்படுத்துவது, தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்கள் மனம் திருந்தி வாழ பிரார்த்தனை செய்வது, அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படும் மத போதனை கூட்டம் மற்றும் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மத சம்பந்தமாக போதிப்பது ஆகியவை மத ஆசிரியரின் பணிகளாகும்.

job oct 27

பணி:

Junior Commissioned Officer (Religious Teacher).

மொத்த காலியிடங்கள்:

72. (பண்டிட் – 59, கிரந்தி – 6, பண்டிட் (கூர்க்கா) – 2, மவுலவி (ஷியா பிரிவு முஸ்லிம்) – 2  புத்த மாங்க் – 3).

வயது:

1.10.2017 அன்று 27 முதல் 34க்குள். (விண்ணப்பதாரர்கள் 1983 அக்.1க்கும், 1990 செப்.30க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும்). சர்வீசில் இருப்பவர்களுக்கு 1.10.2017 அன்று 25 முதல் 34க்குள். (விண்ணப்பதாரர்கள் 1983 அக்.1க்கும், 1992 செப்.30க்குள் பிறந்திருக்க வேண்டும்).

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மத ஆசிரியர் பணிக்கான தகுதி:

அ. பண்டிட்:

இந்து மத ஆசிரியர் பணிக்கு மத்யமா/பூஷன் முடித்திருக்க வேண்டும் அல்லது சம்ஸ்கிருதம் பாடப்பிரிவில் இந்தியை முக்கிய பாடமாகக் கொண்டு பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. கிரந்தி: (சீக்கியர்):

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பஞ்சாபி மொழியில் வித்வான் அல்லது அதற்கு சமமாக உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வித்வான் முடிக்காதவர்கள் பி.ஏ., பட்டப்படிப்பு அளவில் பஞ்சாபி படித்திருக்க வேண்டும்.

இ. பண்டிட் (கூர்க்கா):

சம்ஸ்கிருதத்தில் மத்தியமா படித்திருக்க வேண்டும் அல்லது இந்தியில் பூஷனோ அல்லது நேபாளி மொழியில் அதற்கு சமமான தகுதியோ பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்ஸ்கிருதத்திலோ, இந்தியிலோ பி.ஏ. படித்திருக்க வேண்டும்.

ஈ. மவுலவி (ஷியா):

முஸ்லிம் மத ஆசிரியர் பணிக்குரிய Arabic, Adib Alim, Urdu தெரிந்திருக்க வேண்டும் அல்லது Arabic பாடத்தில் Urdu ஐ ஒரு முக்கிய பாடமாக கொண்டு பி.ஏ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உ. புத்த மாங்க்: (மகாயானம்):

புத்த மத ஆசிரியர் பணிக்குரி பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800.

உடற்தகுதிகள்:

உயரம் – 160 செ.மீ., எடை: 50 கிலோ. மார்பளவு: 77 செ.மீ., எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் ஆந்தை வழிகாட்டி  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.11.16.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 26.2.2017.