August 12, 2022

ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியா-வுக்கு தனி அங்கீகாரம்!

நம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே- அதாவது 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம்தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஐ.நா.வில் உலகின் அனைத்து நாடுகளுமே அதாவது 195க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐ.நா. அமைப் புக்கு முன்னதாக இது போன்ற பல சர்வதேச அமைப்புகள் உருவாகியிருந்தன .அவற்றுள் முக்கியமானது முதல் உலகப் போருக்குப் பின் 1919ம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட ஐக்கிய நாடுகள் சங்கம் ஆகும். இந்த அமைப்பும் உலக சமாதானத்தை பேணுதல் என்ற பிரதான நோக்கத்தை கொண்டிருந்தது. இருப்பினும் அதனால் தனது செயல்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. ஏனெனில் இதில் அனைத்து நாடுகளும் அங்கம் வகிக்கவில்லை. இதில் ஏற்பட்ட தோல்வியே 2ம் உலகப் போருக்குக் காரணமாக அமைந்தது.

அப்படி 2ம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலக தலைவர்கள் ஒன்று கூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும். ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது.

அப்பேர்பட்ட ஐ.நா மன்றத்தின் பொருளாதார மற்றும் சமூக சபையானது (ECOSO)அதன் துணை அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இதில் பொருளாதார, மற்றும் சமூக கவுன்சில் அமைப்புகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதில் 5 தேர்தல்களில் இந்தியா ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியா – பசிபிக் பிராந்தியத்திற்கான அரசுசாரா அமைப்புக்களின் கமிட்டிகளுக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் 46 ஓட்டுகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது, பாகிஸ்தான் 43 ஓட்டுகளும், சீனா 39 ஓட்டுகளும் பெற்றன.

193 உறுப்பு நாடுகளும் அங்கம் வகிக்கும் இந்த NGO commitee மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கமிட்டி யாகும். NGO உரிமத்துக்கான விண்ணப்பங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவும், நிராகரிக்கவும் அதற்கு உரிமை உள்ளது. வரும் ஜனவரி 2019 முதல் தொடங்கி அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தியா இந்த அமைப்பில் அதிகாரம் செலுத்தும்.

அடுத்ததாக UN Development Programme (UNDP), UN Population Fund (UNFPA), UN Office for Project Services (UNOPS) கமிட்டிகளுக்கான நிர்வாகக் குழு தேர்தலில் போட்டியிட்ட இந்தியா இதில் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டது. இந்த கமிட்டிகள் 2019 ஜனவரி முதல் அடுத்த 3 ஆண்டுகள் இந்தியாவின் தலைமையில் செயல்படும்.

இதே போல பாலின சமத்துவம் மற்றும் பெண் அதிகாரமளித்தல் ஆகியவை தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் UN-Women கமிட்டியின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தலிலும் வென்ற இந்தியா இப்பொறுப்பில் ஜனவரி 2019 முதல் அடுத்த 3 ஆண்டுகள் செயல்படும்.

Commission on Population and Development கமிஷனில் உடனடியாக பொறுப்பேற்றவுள்ள இந்தியா செப்டம்பர் 2021 வரையிலும்,  Commission for Social Development கமிஷனில் 4 ஆண்டுகள் பதவியில் இருக்கும்.

Commission on Crime Prevention and Criminal Justice கமிஷனில் ஜனவரி 2019 முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தியா பதவி வகிக்கும்.

சர்வதேச நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தி இருக்கும் காரணத்தினாலேயே இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி கிட்ட காரணமாக அமைந்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவரான சையது அக்பரூதீன் தெரிவித்துள்ளார்