June 24, 2021

கிரிக்கெட் ; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 25ம் தேதி தொடங்கியது.

criket mar 28

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300, இந்தியா 332 ரன்களுக்கு ஆல் அவுட்டாகின. 32 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா வெறும் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 106 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது.

லோகேஸ் ராகுல் 13, முரளி விஜய் 6 ரன்களுடன் இன்று 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முரளி விஜய் 8 ரன்னில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். எனினும் லோகேஸ் ராகுல்-ரஹானே ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தது.

23.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 106 ரன்கள் எடுத்த இந்தியா, 8 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஸ் ராகுல் 51, ரஹானே 38 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதன் மூலம் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. –